தொழில்நுட்ப செய்திகள் – ஜியோவின் புதிய திட்டம்..! ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா..!
ஜியோவின் புதிய திட்டத்தின் படி ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா வரையில் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கட்டணம் (jio recharge plan) என்ன மற்றும் அவற்றில் வழங்கப்படும் சலுகைகளை பற்றி இப்போது நாம் இந்த பகுதியில் படித்தறிவோம் வாங்க..!
தொழில்நுட்ப செய்திகள் ஒப்போவின் புதிய வாக்கி டாக்கி..! |
ஜியோவின் புதிய திட்டம்:-
தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கவும், புதிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணமாக உள்ளது. அந்த வகையில் தற்பொழுது ஜியோ நிறுவனம் டேட்டா பிளான்களில் மீண்டும் ஒரு அதிரடியான திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
அதாவது ஜியோ இதற்கு முன் வரை ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா வரையிலான பிளான்கள் மட்டுமே இருந்து வந்தது, அதாவது 299 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் (jio recharge plan), ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா பெற முடியும். மொத்தம் 28 நாட்களுக்கு 84ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது ஒரு நாளைக்கு 4ஜிபி மற்றும் 5ஜிபி டேட்டா பிளான்கள் வந்துள்ளன.
வந்துவிட்டது சூப்பர் MI Soundbar அதுவும் மிக குறைந்த விலையில்..! |
தொழில்நுட்ப செய்திகள் – ஜியோவின் அதிரடி திட்டம் ஒரு நாளைக்கு 4ஜிபி டேட்டா:-
ஜியோவின் புதிய திட்டத்தின் படி ஒரு நாளைக்கு 4ஜிபி டேட்டா பிளானின் கட்டணம் 509 ரூபாயாகும்(jio recharge plan ). மொத்தம் 28 நாட்களுக்கு 112 ஜிபி வழங்கப்படுகிறது.
தினசரி டேட்டா அளவான 4ஜிபி காலியானதும், நெட்வொர்க்கின் வேகமானது 64 Kbps ஆக குறைக்கப்படும்.
மேலும், தினசரி 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடேட் வாய்ஸ்கால், இலவச ஜியோ ஆப் சந்தாவும் வழங்கப்படுகிறது இந்த புதிய திட்டத்தில்.
தொழில்நுட்ப செய்திகள் – ஜியோவின் அதிரடி திட்டம் ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா:-
ஜியோவின் புதிய திட்டத்தின் படி ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா பிளானின் கட்டணம் 799 ரூபாயாகும் (jio recharge plan). இது தான் ஜியோவில் உள்ள அதிகபட்ச டேட்டா பிளான் ஆகும்.
ஒரு நாளைக்கு 5ஜிபி டேட்டா, வீதம் 28 நாட்களுக்கு 140 ஜிபி வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா அளவான 5ஜிபி காலியானதும், இணையத்தின் வேகமானது 64 Kbps ஆக குறைக்கப்படும்.
மேலும், மற்ற பிளானைப் போலவே தினசரி 100 எஸ்.எம்.எஸ், அன்லிமிடேட் வாய்ஸ்கால், இலவச ஜியோ ஆப் சந்தாவும் வழங்கப்படுகிறது.
வாட்ஸ்அப்பில் இனி போட்டோவும் எடிட் செய்யலாம்! புது அப்டேட்!!! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..! |