Rs.12,900 விலையில் ஷியோமியின் புதிய Mi A3 ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

Advertisement

இன்று முதல் Mi A3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனை..!

இந்தியாவில் இன்று விற்பனைக்கு வரவுள்ள Mi A3 ஸ்மார்ட்போன் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க. அதாவது Mi A3 ஸ்மார்ட்போனின் விலை (mi a3 price) மற்றும் இந்த Mi A3 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.

Mi A3 ஸ்மார்ட்போன்:

Mi A2 ஸ்மார்ட்போனின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனான Mi A3, கடந்த ஆகஸ்ட் 21 அன்று இந்தியாவில் அறிமுகமானது.

ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட்போனான இந்த Mi A3, மூன்று பின்புற கேமராக்களை கொண்டு அமைந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி பிராசஸர், 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட் சென்சார் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

Realme 5 & Realme 5 Pro-வின் விலை மற்றும் அதன் அம்சங்கள்..!

Mi A3 ஸ்மார்ட்போன் (mi a3 price) விலை விவரம்:-

இந்தியாவில் இந்த ஸ்மார்ட் போன்  4GB RAM + 64GB சேமிப்பு அளவு கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் 12,999 ரூபாய் என்ற விலையிலும், 6GB RAM + 128GB சேமிப்பு அளவு கொண்ட Mi A3 ஸ்மார்ட்போன் 15,999 ரூபாய் என்ற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.

Mi A3 ஸ்மார்ட்போன் நிறங்கள்:

இந்த Mi A3 ஸ்மார்ட் போன் நீலம் (Not Just Blue), வெள்ளை (More Than White), மற்றும் சாம்பல் (Kind of Grey) என மூன்று வண்ணங்களில் விற்பனையாக உள்ளது.

அமேசான், Mi.com மற்றும் Mi Home stores போன்ற Mi தளங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை ஆகஸ்ட் 23-ஆன இன்றில் இருந்து விற்பனைக்கு வர உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு அறிமுக சலுகையாக, HDFC கிரடிட் கார்டுகளுக்கு 750 ரூபாய் கேஷ்-பேக் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்ல உங்களுக்கு பிடிச்சவங்க மெசேஜ் அனுப்பறத மட்டும் தனியா பார்க்கும் வசதி இப்போ வந்தாச்சு…

Mi A3 ஸ்மார்ட் போன் சிறப்பம்சங்கள்:-

இரண்டு நானோ-சிம் வசதி கொண்ட Mi A3 ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்பை கொண்டுள்ளது. 6.08-இன்ச் HD+ திரை (720×1560 பிக்சல்கள்), 19.5:9 திரை விகிதம் ஆகிய திரை அம்சங்களை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 திரையை கொண்டுள்ளது. ஸ்னேப்ட்ராகன் 665 எஸ் ஓ சி ப்ராசஸர் பொருத்தப்பட்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.

3 பின்புற கேமராக்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான மூன்றாவது கேமராவை கொண்டுள்ளது.

மேலும், முன்புறத்தில் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 4030mAh அளவிலான பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் 4G, வை-பை வசதி, ப்ளூடூத் v5.0 வசதி, டைப்-C சார்ஜர், 3.5mm ஹெட்போன் ஜாக் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..!
Advertisement