Realme 5 & Realme 5 Pro-வின் விலை மற்றும் அதன் அம்சங்கள்..!
சியோமி நிறுவனம், பலவகையான ஸ்மார்ட்போன் மற்றும் பலவகையான கேட்ஜெட்களை அறிமுகம் செய்து எப்படியெல்லாம் இந்தியாவில் அதன் கால்தடங்களை பதித்து, வாடிக்கையாளர்களின் மனதை கவர்ந்ததோ அதே பாணியை ரியல்மி நிறுவனமும் பின்தொடர்கிறது என்றே சொல்லலாம்.
இந்த ஆண்டு ரியல்மி அதன் பல ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
அந்த வகையில் ரியல்மி 5 தொடரானது, இனி வரும் நான்கு கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களின் விலைகளை நிர்ணயம் செய்யும்.
பிளிப்கார்டில் ஏராளமான புதிய ஆஃபர் !!! |
குறிப்பாக ரூபாய்.20 ஆயிரம் என்ற பட்ஜெட்டில் கீழ், வாங்க கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக ரியல்மி எக்ஸ் திகழ்கிறது. இந்நிலைப்பாட்டில், ரியல்மி அதன் 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்களை இன்னும் முடித்துக்கொள்ளவில்லை என்பதை உறுதி செய்யும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதுவும் வருகின்ற ஆகஸ்ட் 20-ம் தேதி இந்தியாவில் ரியல்மி 5 தொடர் அறிமுகம் ஆகும் என்பதை ரியல்மி நிறுவனம் உறுதியளித்துள்ளது. அவற்றில் ஒன்று Realme 5 என்றும், மற்றொன்று Realme 5 Pro என்றும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வமான பெயரை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.
கேமரா அமைப்பு:
ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஆகிய இரண்டிலுமே நான்கு பின்புற ப்ரத்யோக கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். இது உண்மையாகும் பட்சத்தில், இந்தியாவில் வெளியாகும் முதல் ரியல்மி க்வாட் கேமரா ஸ்மார்ட்போனாக இதுவே திகழும்.
நோக்கியாவின் புது ஸ்மார்ட்போன்!!! |
இந்த ஸ்மாட்போனின் விலை என்னவாக இருக்கும்:
ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஆனது நிச்சயமாக ரியல்மி 3 தொடரை விட உயர்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இருப்பினும் அதிகாரபூர்வமான விலை இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆனால் நிறுவனத்தின் கடந்த கால அறிமுகங்களை கருத்தில் கொண்டால், வரவிருக்கும் ரியல்மி 5 தொடரும் மலிவு விலையின் கீழ் அறிமுகமாகும். இதன் ப்ரோ பதிப்பு ரியல்மி 5-ஐ விட விலை உயர்ந்ததாக இருக்கும் என்பது எதிர்பார்க்கபடுகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் (Tamil Tech News)..! |