Whatsapp -ல் இப்படி ஒரு அம்சம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் இருந்தோமா..?

Advertisement

Whatsapp Disappearing Messages Settings in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு Whatsapp -ல் இருக்க கூடிய ஒரு புதிய அம்சத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய கால கட்டத்தில் அனைத்து மக்களும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் இருக்க கூடிய செயலிகளில் முக்கியமான  ஓன்று Whatsapp. வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அந்த வகையில் இந்த பதிவின் மூலம் வாட்ஸ்அப்பில் இருக்க கூடிய ஒரு அம்சமான Disappearing Messages பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

வாட்சப்பில் இப்படி ஒரு அம்சம் இருக்கிறதா.! ஒரு கல்லில் இரண்டு மாங்கானா இதானா.!

Disappearing Messages in Tamil:

இன்றைய நிலையில் வாட்ஸ்அப்பில் வரும் புதிய புதிய அம்சங்கள் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அதுபோல வாட்ஸ்அப் நிறுவனம் பல அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அப்படி வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒரு அம்சம் தான் இந்த Disappearing Messages. இந்த அம்சத்தை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் எந்த ஒரு மெசேஜை வேண்டுமானாலும் மறைந்து போக செய்ய முடியும்.

நீங்கள் யாருக்காவது ஏதேனும் Messages அனுப்பினால், அந்த Message -யை இதன் மூலம் தானாகவே Delete செய்ய முடியும்.

Disappearing Messages பயன்படுத்துவது எப்படி..? 

Disappearing Messages பயன்படுத்துவது எப்படி

முதலில் உங்களுடைய Whatsapp -க்கு செல்ல வேண்டும். பின் அதில் ஏதேனும் ஒருவரின் Contact -யை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

பின் அதில் அவர்களின் Dp -யை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கீழே நகர்த்தி சென்றால், Disappearing Messages என்ற ஆப்சன் இருக்கும்.

அதை கிளிக் செய்தால் அதில் 24 hours, 7 days, 90days மற்றும் Off என்று 4 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் முதலில் இருக்கும் 3 ஆப்ஷனில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

உதாரணமாக,  நீங்கள் 24 hours என்பதை கிளிக் செய்து, அதன் பிறகு அந்த Contact க்கு ஏதேனும் ஒரு Photo அல்லது Video அனுப்புகிறீர்கள் என்றால், அது 24 மணி நேரத்திற்குள் அவர்களுக்கு Delete ஆகிவிடும்.  

இதன் மூலம் நாம் அனுப்பிய Messages 24 மணி நேரத்திற்குள் தானாகவே Delete ஆகிவிடும்.

அதேபோல இந்த Disappearing Messages என்ற ஆப்சன் உங்களுக்கு வேண்டாம் என்றால், அதை நீங்கள் OFF செய்து கொள்ளவும் முடியும்.

உங்களது WHATSAPP DP-யை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பது தெரியுமா.?
வாட்ஸ் அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement