வாட்ஸப்பில் அனுப்பிய போட்டோவை Gallery-யில் Save ஆகாமல் தடுக்கலாம்

Advertisement

Whatsapp Photos Not Showing in Gallery in Tamil

வணக்கம் நண்பர்களே.! அனைவரும் பயன்படுத்தும் செயலியாக வாட்சப் உள்ளது. வாட்சப்பில் புதிய புதிய விஷயங்களை உருவாக்கி கொண்டு தான் இருக்கின்றனர். நமக்கு தான் அதை பற்றி தெரியவில்லை. பொதுவாக வாட்ஸப்பில் அனுப்பிய போட்டோ Gallery-க்கு save ஆகி விடும். சில நபர்கள் அனுப்புகின்ற தேவையில்லாததாக இருக்கும், ஒரு குறிப்பிட்ட நபரிடம் மட்டுமிருந்து அவர்கள் அனுப்புகின்ற போட்டாவை gallery -க்கு save ஆகாமல் செய்யலாம். அதுமட்டுமில்லை உங்களுக்கு தெரியாத வாட்சப் டிப்ஸையும் தெரிந்து கொள்வோம் வாங்க..

Whatsapp Photos Not Showing in Gallery in Tamil:

Whatsapp Photos Not Showing in Gallery in Tamil

  • முதலில் வாட்சப்பிற்கு செல்லவும். அதில் யார் அனுப்பிக்கின்ற போட்டோ Gallery-யில் Save ஆக கூடாதோ அவர்களின் Dp -யை கிளிக் செய்யுங்கள். அதில் i என்ற வார்த்தையில் வட்டம் போட்டது போல் ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.

Whatsapp Photos Not Showing in Gallery in Tamil

  • பின் அதில்  Media visibility என்பதை கிளிக் செய்யுங்கள்.

Whatsapp Photos Not Showing in Gallery in Tamil

  • Media visibility கிளிக் செய்ததும் அதில் மூன்று ஆப்ஷன் கொடுக்கப்ட்டிற்கும் Default, Yes, No என்று இருக்கும். அதில் No என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்ளோ தான் இப்போ பாருங்க அவர்கள் அனுப்பிக்கின்ற போட்டோ Gallery -யில் Save ஆகாது.
  • இது போல் நீங்கள் யார் யார் அனுப்புகின்ற போட்டோ Gallery -யில் Save ஆக கூடாது என்று நினைக்கிறீர்களோ அவர்கள் Dp யை கிளிக் செய்து மேல் கூறப்பட்டுள்ளது போல் செய்திடுங்கள்.

Whatsapp Voice Record in Tamil:

Whatsapp Voice Record in Tamil

  • நீங்கள் ஒருவருக்கு Voice Record அனுப்புகிறீர்கள் என்றால் அதை அனுப்புவதற்கு முன்னால் நீங்கள் பேசியிருப்பதை கேட்க முடியும். அதற்கு நீங்கள் வாட்சப்பிற்கு செல்லுங்கள். அதில் யாருக்கு Voice Record அனுப்ப வேண்டுமோ அவர்களின் Chat -க்கு செல்லுங்கள். அதில் Voice Record ஆப்ஷனை மேலே இழுத்துவிட்டு Record செய்யுங்கள். Record முடிந்ததும் பார்த்தால் அது அங்கேயே இருக்கும். இப்போ நீங்கள் பேசியதை கேட்ட பிறகு Send செய்யுங்கள்.

Conversation Tone Whatsapp in Tamil:

  • நீங்கள் ஒருவரின் CHAT-யில் இருக்கும் போது அவர்கள் அனுப்புகின்ற Message வரும் போது சவுண்ட் வரும். இந்த Message யை சவுண்ட் இல்லாமல் செய்ய முடியும். அதற்கு வாட்சப்பிற்கு செல்லுங்கள். அதில் மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள். அதில் Settigns என்பதை கிளிக் செய்யுங்கள்.

Conversation Tone Whatsapp in Tamil

  • Settings கிளிக் செய்ததும் Notification என்பதை கிளிக் செய்யுங்கள்.

Conversation Tone Whatsapp in Tamil

பின் அதில் முதலில் இருக்கும் Conversation Tones என்பதை Off செய்யுங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement