WhatsApp to Introduce 3 New Privacy Features in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் WhatsApp பற்றிய ஒரு அருமையான பதிவை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது WhatsApp -யில் உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் மூன்று புதிய தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அது குறைத்த தகவலை நாம் இப்பொழுது இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
Privacy Updates on WhatsApp in Tamil
No: 1 உங்கள் CONTACTS-யில் இருந்து ஆன்லைன் நிலையை HIDE செய்யலாம்:
நண்பர்களே இப்பொழுது வாட்ஸ்அப் செயலியில் ஒரு அற்புதமான அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது உங்கள் CONTACTS-யில் இருந்து ஆன்லைன் நிலையை HIDE செய்யலாம். அதாவது இந்த அம்சத்தினால் நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது யார் பார்க்கலாம் என்பதை இப்போது நீங்கள் தேர்வு செய்ய முடியும்.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஆன்லைனில் இருப்பதை, குறிப்பிட்ட சில நபர்கள் அறிந்துகொள்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அவர்களிடம் இருந்து மட்டும் உங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கலாம்!
அது எப்படி முடியும் என்று யோசிக்கிறர்களா? அதற்கான ஸ்டேப் இதோ..
முதலில் உங்கள் வாட்ஸ்அப்பை திறந்து கொள்ளுங்கள் அவற்றில் WhatsApp settings உள்ளே செல்லுங்கள்.
பின் Account என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்பு Privacy என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு Last Seen என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
இப்பொழுது Everyone, My contacts, My contacts except, Nobody என்ற நான்கு ஆப்ஷன்கள் காட்டப்படும், அவற்றில் நீங்க My contacts except என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இப்பொழுது உங்கள் contacts-யில் உள்ள அனைவரது WhatsApp எண்களும் காண்பிக்கப்படும்.
அவகற்றில் நீங்கள் யாருக்கு உங்களது ONLINE STATUS கட்டக்கூடாது என்று நினைக்கிணறுகிறாளோ அவர்களது நம்பரை மட்டும் தேர்வு செய்துகொள்ளுங்கள் பிறகு ஓரு சிறிய வட்டத்தின் உள்ளே டிக் ஆப்ஷன் இருக்கும் அதனையும் டிக் செய்துகொள்ளுங்கள். அவ்வளவு தான் நீங்கள் தேர்வு செய்த எங்களுக்கு மட்டும் உங்களது Last Seen காட்டாது.
No: 2 View Once மெசேஜ்களை Screenshot எடுக்க முடியாது:
WhatsApp அறிமுகமான வேகத்தில் ‘வியூ ஒன்ஸ் மெசேஜஸ்’ என்கிற அம்சமானது, வாட்ஸ்அப்பில் அணுக கிடைக்கும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகி விட்டது. அறியாதோர்களுக்கு வியூ ஒன்ஸ் மெசேஜஸ் அம்சத்தின் கீழ் நீங்கள் அனுப்பும் டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ அல்லது வீடியோவை, பெறுநரால் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் இந்த அம்சத்தில் இருக்கும் ஒரு பெரிய குறை என்னவென்றால் ‘வியூ ஒன்ஸ்’ மெசேஜாக அனுப்பினாலும் கூட அதை ஸ்க்ரீன்-ஷாட் எடுக்க முடியும். அதை தடுக்கும் ப்ரைவஸி செட்டிங்ஸ்-ஐ தான் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது இந்த அம்சத்தை சோதித்து வருகிறது, விரைவில் அதன் பயனர்களுக்கு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
No: 3 WhatsApp Group-யில் யாருக்கும் தெரியாமலேயே SILENTLY-ஆக வெளியேறலாம்:
பொதுவாக நாம் இருக்கும் WhatsApp Group-யில் இருந்து வெளியேறினால். நாம் அந்த குரூப்பில் இன்று வெளியேறிவிட்டம் என்று அனைவருக்கும் காட்டும் அல்லவே. ஆனால் கூடியவிரைவில் இதற்கு ஒரு அருமையான அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த அம்சம் அறிமுகம் செய்த பிறகு நாம் இருக்கும் WhatsApp Group-யில் இருந்து வெளியேறினால் நாம் வெளியேறிவிட்டோம் என்று அனைவர்க்கும் குறும்செய்தியை அனுப்பது. இதன் மூலம் நாம் அந்த WhatsApp Group-யில் இருந்து அமைதியாக வெளியேற முடியும்.
“அனைவருக்கும் தெரிவிக்காமல், தனிப்பட்ட முறையில்” ஒரு க்ரூப்பில் இருந்து வெளியேற முடியும். அப்படி நீங்கள் வெளியேறும் போது, அது குறித்த நோட்டிஃபிக்கேஷன் முழு க்ரூப்பிற்கும் கிடைப்பதற்கு பதிலாக, அட்மின்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |