40 வயதுக்கு பிறகு கருத்தரிக்க முடியாது என்று கூறுவது உண்மையா?
Can You Conceive After 35 Years in Tamil – இன்றைய காலகட்டத்தில் பலர் திருமணம் ஆனவுடனேயே குழந்தை பெற்றுக்கொள்வாய்த்தை பற்றி யோசிப்பது இல்லை. சில வருடங்கள் போகட்டும் என்று தள்ளிபோட்டுக்கொள்கின்றன. சிறுப்பினும் சில பெண்களுக்கு குறிப்பிட்ட வயது கடந்தபின் கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாகிறது. அதிலும் பெண்களுக்கு 35 வயதுக்கு பின் கருத்தரிக்க முடியாது என்றும் கூறுகின்றன. இது உண்மைதானா.. இதற்கு ஆவுகள் கூறுவது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.
கருப்பை முதிர்ச்சி:
கருப்பையில் ஏற்படும் முதிர்ச்சி என்பது கருப்பை நுண்ணறைகள் மற்றும் கருப்பைகள் இழப்பு அல்லது கருமுட்டையின் தரம் குறைதல் போன்றவற்றைப் பொறுத்தே மாறுபடும். இது மரபியல் மற்றும் சுற்றுச்சூழலால் பாதிக்கப்படுகிறது.
குறையும் கருமுட்டை:
பொதுவாக பெண்களுக்கு வயதாகும் பொழுது அவர்களுக்கு கருமுட்டையின் இருப்பும், எண்ணிக்கையும் குறைந்து அதன் தரம் மற்றும் அளவும் பாதியாக குறைந்து விடும். எனவே, பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் போது கர்ப்பம் தரிப்பது நல்லது. ஏனென்றால், 35 வயதுக்குப் பின் குறைந்த எண்ணிக்கையிலான கருமுட்டைகளை மட்டுமே அவர்கள் கொண்டிருப்பார்கள். இதனால் அவர்கள் கர்ப்பமாவது கடினமாகி விடும். உங்களின் கருமுட்டை இருப்பை மகளிர் மருத்துவ நிபுணர்கள் மூலம் இரண்டு முறைகளைப் பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
ஆன்ட்ரல் போலிகல் கவுண்ட்:
அல்ட்ரா சவுண்ட் முறை மூலம் கருமுட்டைகளை எண்ணுவது.
ஆன்டி முல்லேரியன் ஹார்மோன்:
இருப்பு கருமுட்டைகளை எண்ணுவதற்கான மற்றொரு வழி இது. இதனை வழக்கமான இரத்தப் பரிசோதனை மூலமே செய்து கொள்ளலாம். இந்த இரண்டு செயல்முறைகளிலும் மூலம் கருமுட்டைகளின் எண்ணிக்கை, குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
பெண்ணின் இனப்பெருக்க காலம் – Can You Conceive After 35 Years in Tamil:
பெண்ணின் இனப்பெருக்க ஆண்டுகளை அவள் பருவமடைந்து முதல் மாதவிடாய் தொடங்கும் காலத்திலிருந்து கணக்கிடலாம். அதாவது சுமார் 12 அல்லது 13 வயது முதல் கணக்கிடப்படும். குழந்தை பெறுவதற்கு சரியான வயது என்றால் பூப்படைவதிலிருந்து 10 முதல் 15 வருடங்களுக்குள் என்று பலரும் சொல்வர். இன்னும் சிலர் ஆரோக்கியமான பெண்ணாக இருக்கும்பட்சத்தில் 30 வயது வரை கூட குழந்தை பெற்றுக் கொள்ள எந்த சிரமமும் இருக்காது.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |