Dispas Tablet in Tamil
இன்றைய காலக்கட்டத்தில் உடலில் ஏதாவது சிறிய பிரச்சனை என்றாலும் உடனடியாக மெடிக்களுக்கு சென்று மாத்திரை வாங்கி உட்கொள்கிறோம். ஆனால் அவ்வாறு மருத்துவரை அணுகாமல் நீங்களே மருந்து வாங்கி சாப்பிடுவது தவறு. அப்படி நீங்கள் மருத்துவரை அணுகாமல் மருந்து வாங்கி சாப்பிட்டாலும் அந்த மருந்தினை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்துகொண்டு பிறகு சாப்பிடுவது நல்லது.
அந்தவகையில் டிஸ்பாஸ் மாத்திரை பற்றிய முழுவிவரங்களையும் இன்றைய பதிவில் விரிவாக காணலாம்.
Dispas Tablet Uses in Tamil:
இந்த ஆண்டிஸ்பாஸ்மோடிக் மருந்தான டிஸ்பாஸ் மாத்திரை ஒரு சில குறிப்பிட்ட வகை குடல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. பொதுவாக இந்த டிஸ்பாஸ் மாத்திரை குடல் மற்றும் வயிற்றுப் பிடிப்பு ஆகியவற்றை குறைக்க உதவுகிறது.
மேலும் இந்த மருந்து குடலின் இயற்கையான இயக்கங்களை மெதுவாக்குவதன் மூலமும், வயிறு மற்றும் குடல் தசைகளை தளர்த்துவதன் மூலமும் செயல்படுகிறது.
இதையும் படியுங்கள்=> மெட்லர் பிளஸ் மாத்திரை பற்றி உங்களுக்கு தெரியுமா..!
பயன்படுத்தும் முறை:
உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தலின் படி, இந்த மருந்தை ஒரு நாளைக்கு 4 முறை வாய் வழியே, உணவுடனோ அல்லது உணவு இல்லாமலோ எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பாக இந்த மருந்தினை 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஆகியோர் பயன்படுத்தக்கூடாது.
முக்கியமாக உங்களுக்கு கண்ணிறுக்கம், விரிவடைந்த புரோஸ்டேட், சிறுநீர் பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், நரம்பு மண்டல பிரச்சனைகள், மயஸ்தீனியா கிராவிஸ், கல்லீரல், இதயம், தைராய்டு, குடல் அல்லது சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்ற பிறகே இந்த மருந்தினை பயன்படுத்தவேண்டும்.
பக்கவிளைவுகள்:
பொதுவாக இந்த மருந்தை தொடர்ந்து உட்கொள்வதின் மூலம் தலைச்சுற்றல், பலவீனம், கண்கள் வறண்டு போதல், மங்கலான பார்வை, வறண்ட வாய் மற்றும் வயிறு வீக்கம் போன்ற பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படும்.
மேலும் தோலில் சூடான உணர்வு, ஒழுங்கற்ற இதயத் துடிப்பு, தெளிவற்ற பேச்சு, ஒருங்கிணைப்பு இழப்பு, மனநிலை மாற்றங்கள் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். மருந்தின் நன்மைகள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | மருந்து |