டென்ஷனா இருக்கும் போது இதை பண்ணுங்க ரிலாக்ஸா பீல் பண்ணுவீங்க..!

Advertisement

மன அழுத்தம் குறைய யோகா | Mana Alutham Kuraiya Yoga

வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி மன அழுத்தம், மனக்கஷ்டம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மன அழுத்தம் என்பது தடுக்க முடியாத ஒன்றாகும். மன அழுத்தத்தினால் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதனால் இந்த பதிவில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான யோகாவை தெரிந்து கொள்வோம். யோகாவை தெரிந்து கொள்வதோடு இல்லாமல் ட்ரை செய்து பாருங்கள். உங்களின் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும்.

சாந்தி ஆசனம் செய்முறை:

மன அழுத்தம் குறைக்க யோகா

முதலில் விரிப்பில் படுத்து கொள்ளவும். கை விரல்கள் வானத்தை பார்த்து இருக்க வேண்டும். பிறகு கண்களை மூடி கொள்ளவும்.

பிறகு உடம்பின் ஒவ்வொரு பகுதியாக அதாவது, வலது கை, இடது கை, இருதயம், நுரையீரல், வயிறு,  சிறுகுடல், தொண்டைப்பகுதி, வலது கால், இடது கால் போன்ற பகுதிகளை நினைத்து கொள்ளவும்.

இதையும் படியுங்கள் ⇒  உடல் மற்றும் மனம் சார்ந்த 17 பிரச்சனைக்கு தினமும் இந்த ஒன்னு போதும்!

மேல் கூறப்பட்டுள்ள உறுப்புகளை ஒவ்வொரு உறுப்பாக மனதில் நினைத்து டென்சன் எல்லாம் வெளியேறுவதாக நினைத்து மனதை ரிலாக்ஸ் செய்யவும். இந்த மாதிரி ஒவ்வொரு உறுப்பையும் நினைத்து செய்ய வேண்டும்.

இது போல் செய்து முடித்த பின் உடனே எழாமல் விரிப்பில் 5 நிமிடம் அமைதியாக படுத்திருக்க வேண்டும். பிறகு மெதுவாக எழுந்து உட்கார வேண்டும்.

சாந்தி ஆசனத்தின் பயன்கள்:

  1. மன அழுத்தம் நீங்கும். 
  2. இரத்த அழுத்தம் குறையும். 
  3. இதயத்தில் பிரச்சனை வராமல் இருக்கும். 
  4. இரத்த ஓட்டம் சீராக இயங்கும். 
  5. பதற்ற நிலை குறையும். 
  6. கோபம் நீங்கி மனதிற்கு அமைதி கிடைக்கும். 
  7. சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. 

மனிதனின் அனைத்து பிரச்சனைக்கும் மன அழுத்தம் தான் காரணம். மன அழுத்தத்தால் உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் ஒழுங்காக செயல்படாமல் பல வகையான நோய்கள் வருகின்றது. இந்த சாந்தி ஆசனம் ஒன்று தான் உடல் வெளி தசைகள், உடலுக்குள் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலுள்ள டென்ஷனை வெளியேற்றி மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்கின்றது.

இந்த ஆசனம் செய்வதற்கு ஈசியாக இருந்தாலும் மனதை ஒரு நிலைப்படுத்துவது தான் கஷ்டமாக இருக்கும். ஆனால் நீங்கள் ஒரு முறை செய்து விட்டால் ஈசியாக தான் இருக்கும்.

இதையும் படியுங்கள் ⇒ மன அழுத்தம் மற்றும் கோபம் குறைய யோகாசனம்..!

இது போன்ற யோகா தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்  யோகா 
Advertisement