இந்த தொழிலை செய்தால் எக்காலத்திலும் நஷ்டமே ஆகாது

Advertisement

லாபம் தரும் தொழில்கள் | Arisi Kadai Business inTamil

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் எக்காலத்திலும் நஷ்டமே ஆகாத தொழிலை பற்றி தான் காணப்போகிறோம். அது என்ன தொழில் அப்படி என்று யோசிக்கிறீர்களா.? நாம் அனைவரும் சாப்பிட்டால் தான் வாழ முடியும். சாப்பிடுவதற்கு தேவையான உணவுகளில் முக்கியமானது என்ன.? அரிசி. நாம் உணவுகளில் இட்லி, சாதம், இடியாப்பம் இன்னும் பல உணவுகள் செய்வதற்கு முக்கியமாக இருப்பது அரிசி தானே. இப்போ கண்டுபிடித்து இருப்பீர்கள் என்ன தொழில் என்று. அரிசி கடை  தொழில். இந்த தொழில் செய்தால் நஷ்டம் ஆகுமா நிச்சயமா ஆகாதுங்க. இந்த தொழிலை எப்படி  சிறப்பாக செய்வது என்று பார்ப்போம்.

இதையும் படியுங்கள் ⇒ பெண்களே வீட்டில் Freeya இருக்கீர்களா.! அந்த நேரத்தில் வேலை செய்தால் மாதம் Rs.20,000 சம்பாதிக்கலாம்

அரிசி வகைகள்:

அரிசி வகைகள்

  • இட்லி அரிசி
  • பொன்னி அரிசி
  • பாஸ்மதி அரிசி
  • பிரியாணி அரிசி
  • கர்நாடக அரிசி
  • சீரக சம்பா அரிசி
  • புழுங்க அரிசி

இன்னும் பலவகையான அரிசி வகைகள் உள்ளன. அதில் உங்களுக்கு தேவையான அரிசிகளை மட்டும் வாங்கி கொள்ளுங்கள்.

Arisi Viyabaram in Tamil:

நாம் அன்றாட வாழ்வில் முக்கியமான ஒன்று அரிசி. அத்திவாசியமான ஒன்று எந்நாளிலுமே நஷ்டமே ஆகாது. நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உங்கள் ஏரியாவில் என்ன அரிசி அதிகமா வியாபாரம் ஆகுது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் தொழில் தொடங்குவதற்கு வசதியாக இருக்கும்.

நீங்கள் சிறிய அளவிற்கு தொடங்குறீர்கள் என்றால் சிறிய கடை போதுமானது. அந்த கடைக்கு மாதம் வாடகையாக Rs.4000/- இருக்கும். இல்லை நான் பெரிய அளவில் தான் தொடங்க போறேன் அப்படியென்றால் ஒரு குடோனை தேர்ந்தெடுப்பது நல்லது.

அரிசியில் பல வகைகள் உள்ளது. ஆனால் நீங்கள் அரிசி கடை வைக்கும் இடத்தில் என்னென்னெ அரிசி அதிகமாக வியாபாரம் ஆகின்றதோ அந்த அரிசிகளை வாங்கினால் தான் சிறப்பாக இருக்கும்.

அரிசி வாங்குவது எப்படி:

அரிசி வாங்குவது எப்படி

நீங்கள் சிறிய கடை தான் வைக்க போகிறீர்கள் என்றால் உங்கள் ஏரியாவில் WHOLESALE அரிசி கடை இருக்கும். அங்கு வாங்குவது சிறந்தது. இல்லையென்றால் அரிசி விளையும் இடத்தில் மொத்த அளவில் எடுத்து விற்றால்  நல்ல லாபம் இருக்கும். அதாவது தஞ்சாவூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் அரிசி ஆளை அதிகமாக உள்ளது. இந்த இடங்களிலும் அரிசி மொத்தமாக வாங்கி விற்பனை செய்யலாம்.

அரிசி கடை விளம்பரம்:

நீங்கள் எந்த தொழில் செய்தாலும் விளம்பரம் ரொம்ப முக்கியம். மற்றவர்களுக்கு உங்கள் கடையில் உள்ள சிறப்பு, என்னென்ன அரிசி இருக்கு என்பது தெரிந்தால் தானே வாடிக்கையாளர் தேடி வருவார்கள். அந்த வகையில் அரிசி கடைக்கும் சிறிய அளவு Notice இல்லையென்றால் உங்களுக்கு உகந்த வகையில் விளம்பரம் செய்யுங்கள். அப்போது தான் வாடிக்கையாளர்கள் அதிகமாக கிடைப்பார்கள்.

அரிசி விற்பனை:

அரிசி விற்பனை

நீங்கள் உங்கள் ஏரியாவில் உள்ள கடைகளில் விற்கும் விலையை விட குறைவாக விற்க வேண்டும். அப்போது தான் உங்களை தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஹோட்டல் மற்றும் Apartment, Hostel  போன்றவற்றில் விற்பனையை ஏற்படுத்த வேண்டும். இந்த மாதிரி மொத்த இடத்தில் வியாபாரத்தை பிடித்தோம் என்றால் நமக்கு லாபம் நன்றாக இருக்கும்.

எக்காலத்திலும் வியாபாரம் சரிவை அடையாத இந்த தொழிலை செய்து வாழ்க்கையில் முன்னேறுங்கள்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022

 

Advertisement