இந்த ஆண்டே இந்த தொழிலை தொடங்குங்கள்..! வருங்காலத்தில் நீங்கள் தான் தொழிலதிபர்..!

Advertisement

Business Ideas in Tamil

இன்றைய நிலையில் அனைவரிடமும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. இருந்தாலும் அவர்களிடம் என்ன தொழில் தொடங்குவது, அதற்கு முதலீடு எவ்வளவு தேவைப்படும், அந்த தொழில் தொடங்கினால் வருமானம் கிடைக்குமா..? என்ற பல கேள்விகள் பலருக்கும் இருக்கும். அந்த வகையில் இந்த பதிவு அவர்களுக்கு ஒரு பதிலாக இருக்கும். இந்த பதிவின் மூலம் ஒரு சிறந்த தொழிலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Digital Marketing in Tamil:

Digital Marketing in Tamil

டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது ஆன்லைன் மார்க்கெட்டிங் என்றும் அழைக்கப்படுகிறது. இது இணையம் மற்றும் பிற டிஜிட்டல் தகவல் தொடர்புகளைப் பயன்படுத்தி மின்னஞ்சல், சமூக ஊடகம் மற்றும் இணைய அடிப்படையிலான விளம்பரங்களை வெளியிடும் ஒரு மார்க்கெட்டிங் சேனலாக இருக்கிறது.

Digital Marketing என்பது சமூக ஊடகங்கள், SCO, மின்னஞ்சல் மற்றும் Mobile  சாதனங்கள் போன்ற டிஜிட்டல் சேனல்கள் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்யும் ஒரு செயல்முறை என்று சொல்லலாம்.

இதில் ஆன்லைன் சேனல்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி வணிகம், தயாரிப்பு அல்லது சேவையின் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம் போன்றவற்றை உருவாக்கலாம்.

2023 ஆம் ஆண்டில் உங்களை முதலாளியாக மாற்றக்கூடிய சிறந்த தொழில்கள்..!

Digital Marketing Business Ideas in Tamil:

Digital Marketing Business Ideas in Tamil

இன்றைய நிலையில் ஆன்லைன் மூலம் அதிக வணிகங்கள் தொடங்குவதால் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவை அதிகரித்து வருகிறது. அதனால் நீங்கள் சொந்தமாக டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியை உருவாக்கலாம்.

யார் வேண்டமானாலும் இந்த தொழிலை தொடங்கலாம். எவரும் அவர்களின் கல்விப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியை தொடங்கலாம். இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தே தொடங்கலாம்.

இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழிலை தொடங்குவதற்கு முதலீடு அதிகம் தேவையில்லை. அதுபோல இந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பது 8 வகைகளாக பிரிக்கப்படுகிறது.

  1. Search Engine Optimization
  2. Pay-per-Click
  3. Social Media Marketing
  4. Content Marketing
  5. Email Marketing
  6. Mobile Marketing
  7. Marketing Analytics
  8. Affiliate Marketing

உங்கள் வணிகத்திற்கு எந்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சிறப்பாக இருக்கும் என்பதை தீர்மானித்து இதில் இருக்கும் ஏதாவது ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் வணிகத்தை தொடங்கி அதன் மூலம் மாதம் மாதம் நல்ல வருமானத்தை பெறலாம்.

இதுபோல நீங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழிலை தொடங்கி உங்கள் வாழ்க்கையில் நீங்களும் முன்னேற முடியும்.

எப்பொழுதும் Demand உள்ள இந்த தொழிலை தொடங்கி பாருங்க..! தினமும் அதிக லாபம் தான்..!
உங்களை முதலாளியாக மாற்றக் கூடிய சிறந்த தொழில்கள்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement