இந்த தொழில் ஆரம்பித்தாள் ஒரு நாளைக்கு 25000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Advertisement

Egg Paper Tray Making Business in Tamil

புதியதாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.. நமது பொதுநலம்.காம் பதிவில் தினமும் சுயமாக தொழில் துவங்க பலவகையான யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு என்னவென்றால் முட்டைகள், பழங்கள் போன்ற போல பொருட்களை அடிக்கி வைப்பதற்கு மற்றும் பேக்கிங் செய்வதற்கு பயன்படுத்தும் Paper Tray தயார் செய்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். குறிப்பாக இந்த  Paper Tray சில வகையான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அதிகளவு பயன்படுகிறது. ஆக நாம் இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும். சரி வாங்க இந்த தொழில் செய்வதினால் என்ன பயன், இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், எவ்வளவு வருமானம் கிடைக்கும், என்னென்ன இயந்திரங்கள் தேவைப்படும், எப்படி சந்தைப்படுத்தலாம் போன்ற தெளிவான தகவல்களை இப்பொழுது படித்தறிவோம் வாங்க.

பயன்கள்:

முட்டைகளை பாதுகாப்பாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்வதற்கு இந்த Egg Paper Tray தேவைப்படுகிறது.

ஆப்பிள் பழங்களை அழகாக அடிக்கி வைப்பதற்கும் இந்த Paper Tray தேவைப்படுகிறது.

பேப்பரில் பாக்ஸ் செய்து அவற்றில் முட்டை அடிக்கி விற்பனை செய்வதற்கும் பேப்பர் பாக்ஸ் தேவைப்படுகிறது.

Cup Tray, Bottle Tray, Industrial Packing, shoe stretcher செய்வதற்கு என்று பலவகையான பயன்பாட்டிற்கு இந்த Paper Tray  தேவைப்படுகிறது. ஆக நாம் இதனை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

இந்த Paper Tray தயார் செய்வதற்கு அவசியம் தேவைப்படும் பழைய பேப்பர், அட்டை, பிரவுன் பேப்பர், பழைய புத்தகம், பழைய செய்தி தாள் இது போன்ற வைத்தான் அதிகமாக தேவைப்படும்.

தேவைப்படும் இயந்திரம்:

இந்த Paper Tray தயார் செய்வதற்கென்று மூன்று வகையான இயந்திரங்கள் இருக்கின்றன.

No: 1 Manual Pressing Machine:

இந்த Manual Pressing Machine-யின் விலை 1,50,000/- ஆகும். இந்த இயந்திரத்தில் நாம் தூள் செய்யப்பட்ட பேப்பர்கள் மற்றும் தண்ணீரின் அளவை செட் செய்து இயந்திரத்தை இயக்கினால் போதும் ஒரு நாளுக்கு 2000 வரை paper Tray தயார் செய்துவிடலாம். தயார் செய்த Paper Tray-ஐ ஒரு நாள் முழுவது வெயிலில் காயவைத்து எடுக்க வேண்டியதாக இருக்கும்.

No: 2 Semi-Automatic Machine

இந்த Semi-Automatic Machine பொறுத்தவரை இதனுடைய விலை 5 லட்சம் ஆகும். இந்த இயந்திரத்தை வாங்கி பயன்படுத்துவதால் நமக்கு எந்த ஒரு வேலையும் இருக்காது. அனைத்து வேலைகளையும் இந்த Semi-Automatic Machine பார்த்துக்கொள்ளும். தயார் செய்து வெளி வந்த Paper Tray-ஐ மட்டும் வெயிலில் கையபோதும் வேலை மட்டும் இருக்கும். இந்த இயந்திரத்தில் ஒரு நாளுக்கு 20000 paper tray தயார் செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
ஒரே Transaction-யில் 80000 ரூபாய் லாபம் அருமையான தொழில்..!

No: 3 Fully Automatic Machine

மூன்றாக பார்க்க இருப்பது Fully Automatic Machine இதன் விலை 10 லட்சம் இருக்கும். இந்த இயந்திரத்தை வாங்கி பயன்படுத்துவதினால் நமக்கு எந்த ஒரு வேலைகளும் இருக்கும். அனைத்து வேலைகளையும் இந்த இயந்திரம் பார்த்து விடும். குறிப்பாக Paper Tray-ஐ காயவைக்கும் வேலைகள் வரை அனைத்தையும் இந்த இயந்திரம் செய்து விடும்.

இந்த மூன்று இயந்திரங்களில் உங்களுக்கு எந்த இயந்திரம் வசதியாக இருக்குமோ அந்த இயந்திரத்தை நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள். பெரிய அளவில் தொழில் தொடங்க போறீங்க அப்படின்னா இயந்திரம் வாங்க லோன் கிடைக்கிறது. அந்த லோன் வாங்கியும் நீங்கள் இயந்திரங்களை வாங்கிக்கொள்ளலாம்.

சந்தை வாய்ப்பு:

நீங்கள் தயார் செய்த Tray-ஐ கோழி பண்ணை, பழங்கள் விற்கப்படும் மார்க்கெட் இது போன்ற இடங்களில் நீங்கள் தயார் செய்த Tray-ஐ விற்பனை செய்யலாம்.

உற்பத்தி:

உற்பத்தி பொறுத்தவரை ஒரு நாளுக்கு 5000 ட்ரே முதல் 75000 ட்ரே வரை உற்பத்தி செய்ய முடியும். இருப்பினும் அது இயந்திரத்தை பொறுத்தது.

வருமானம்: 

ஆப்பிள் பேக்கிங் செய்யும் ட்ரே ஒன்று 8 ரூபாய், அதேபோல் முட்டை பேப்பர் ட்ரே ஒன்றிற்கு 3 ரூபாய். ஆக ஒரு நாளுக்கு 3000 முட்டை பேப்பர் ட்ரே, 2000 ஆப்பிள் பேக்கிங் ட்ரே உற்பத்தி செய்தால்.. 16000 + 9000 = 25000 ரூபாய் வருமானம் கிடைக்கும். ஒரு வாரத்திற்கு 1,75,000/- ரூபாய் வருமானம் கிடைக்கும்.

முதலீடு:

இந்த தொழிலை பொறுத்தவரை குறைந்தபட்ச முதலீடாக 2,00,000 ரூபாய் வரை தேவைப்படும்.

இடம்:

இந்த தொழிலை பொறுத்தவரை நீங்கள் இதற்கென்று தனியாக இடம் அமைத்துக்கொண்டு உற்பத்தி செய்வது தான் மிகவும் சிறந்தது. அது நீங்கள் வீட்டு பக்கத்தில் இடம் இருந்தால் கூட ஓகே தான்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
ரிபேக்கிங் பிசினஸ் வாங்கும் விலை 100 ரூபாய்​ விற்கும் விலை 500 ரூபாய்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement