போட்டி இல்லாத தொழில்
வணக்கம் நண்பர்களே இன்று நம் வியாபார பதிவில் தினமும் வருமானம் கிடைக்க கூடிய தொழிலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம், ஒரு போட்டியில்லாத தொழில்தான் இது, இந்த தொழிலை தொடங்குவதற்கு நம் வீட்டிலே ஒரு சிறியதாக இடம் இருந்தாலே போதும், மேலும் இந்த தொழிலை தொடங்குவதற்கு தேவையான முதலீடுகள் என்னவென்றும், கிடைக்க கூடிய வருமானம், பேக்கிங் செய்யும் முறைகளை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
ஒரு வாரத்தில் 20,000 வரை வருமானம் பெறலாம்.! |
food making business in tamil:
இன்று நம்ப பாக்க கூடிய தொழில் என்னவென்றால் பொதுவாகவே அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு உணவு பொருள் பற்றி தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். அதாவது என்ன உணவு பொருள்கள் என்றால் பொறி, பொறிச்சக்கடலை, பாப்கான் போன்ற கடலை பொருட்களை தயாரிப்பது பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம்.
உணவு பொருள் தயாரிக்கும் மெஷின்:
நாம் சாப்பிட கூடிய உணவு பொருட்களான கடலை, பொறி, பாப்கான் போன்ற பல விதமான உணவு பொருட்களை இந்த ஒரே மெஷின் கொண்டு தயாரிக்கலாம். இந்த மெஷினுடைய பெயர் Roasting Machine. இதனுடைய விலை 45,000 யில் இருந்து இருக்கிறது. இந்த Roasting Machine நீங்கள் ஆன்லைன் மூலமாக கூட வாங்கிக்கொள்ளலாம். justdial, indimart, exportersindia.com போன்ற வெப்சைட் மூலமாக இந்த மெஷினை வாங்கிக்கொள்ளலாம். இந்த மெஷின் 100 லிருந்து 150 கிலோ வரையும் ப்ரொடெக்சன் எடுக்கப்படுகிறது.
தேவைப்படும் முதலீடு:
உணவு பொருளை தயாரிப்பதற்கு அரிசியின் விலை 1kg 22 ரூபாய் லிருந்து 30 ரூபாய் வரை செலவுகள் ஆகிறது, மொத்தமாக இந்த உணவு பொருளை தயாரிப்பதற்கு 2700 வரை தான் முதலீடு தேவைப்படுகிறது, ஆனால் கிடைக்க கூடிய வருமானம் அதிக அளவில் கிடைக்கிறது.
விற்பனை செய்யும் முறை:
இந்த பொருட்களை தயாரித்து மொத்தமாக விற்கும் பொழுது 100 கிலோவுக்கு 3800 வருமானம் கிடைக்கிறது. இதுவே நீங்கள் சில்லறையாக வியாபாரம் செய்யும் பொழுது 1 கிலோவுக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை இலாபம் கிடைக்கிறது. அதாவது ரீடைலாக விற்கும் பொழுது 60 % வரையும் கிடைக்கிறது. இந்த பொருட்களை தயாரித்து அருகில் இருக்கும் கடைகளில் மட்டும் கொடுப்பதுமட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமாக கூட விற்பனை செய்து வரலாம். மேலும் இந்த தொழிலை நீங்களும் தொடங்கி அதிகமாக வருமானத்தை பெறுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |