முதலீடு போட்டால் நஷ்டம் இல்லாத தொழில் இது | JCB Business Ideas in Tamil

Advertisement

 JCB Business Plan in Tamil

வணக்கம் நண்பர்களே..! இன்று வியாபாரம் பதிவில் நஷ்டம் ஏற்படாத ஒரு தொழிலை பற்றி பார்க்க போகிறோம். நஷ்டம் ஏற்படலாம் என்ன தொழில் செய்ய முடியும் என்பது அனைவருடைய கருத்து. ஆனால் திட்டமிட்டு செயல்படுத்தினால். நஷ்டம் ஏற்படாமல் தடுக்கலாம். இன்றைய இளைஞர்கள் நிறைய பேர் தனியாக தொழில் தொடங்குவதை  கனவாக வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் பணத்தை கையில் வைத்துக்கொண்டு என்ன தொழில் செய்யலாம் என்று யோசிப்பார்கள். இருவருக்கும் இந்த பதிவு உதவியாக இருக்கும் அதாவது தொழில் தொடங்கும் அனைவருக்கும் இந்த தொழில் நஷ்டத்தை தருவதற்கு வாய்ப்பு கிடையாது. வாங்க அதனை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மாதம் ரூ. 40,000/- சம்பாதிக்க 5 சூப்பரான பிசினஸ்

 JCB Business Plan in Tamil:

புதிதாக தொழில் தொடங்குபவர்க்கு JCB தொழில் மிகவும் நல்லது. இதனை வாங்குவதும் எளிது என்றால் இதை வாங்குவதற்கு பணத்தை முழுவதும் கட்டவேண்டும் என்று அவசியம் இல்லை. மூன்றில் ஒரு பங்கு கட்டி அதனை வாங்கிக்கொள்ளாம்.

ஜேசிபி விலை | JCB Price in India:

ஒரு ஜேசிபி விலை 24.55 லட்சம் என்று சொல்கிறார்கள். அதற்கு இன்சூரன்ஸ் செய்ததை சேர்த்தால் 25 லட்சம் ஆகும். அதனை நீங்கள் வாங்குவதற்கு 15 சதவீதம் செலுத்தினால் போதும் அதாவது 3.1/2 லட்சம் கட்டி வாகனத்தை வாங்கிக்கொள்ளாம். இவற்றில் நிறைய விதமான JCB Types உள்ளது, அதுமட்டுமில்லாமல் அதற்கு நிறைய வகையான Model உள்ளது அதனை பார்ப்போம்.

JCB Types:

  • Backhoe Loaders
  • Excavators
  • Compactors
  • Telehandlers or Loadall
  • Wheeled Loaders
  • Access Platforms. இதில் முதல் இரண்டு மட்டும் அதிக இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் Backhoe Loaders இதில் நிறைய வகையான மாடல்கள் உள்ளது அதனை பார்ப்போம் வாங்க.

Backhoe Loader JCB வகைகள்:

  • 2DX
  • 3DX
  • 3DX plus
  • 3DX xtra
  • 3DX super
  • 4DX  இந்த மாடல்களுக்கு தகுந்தவாறு விலைகள் மாறும்.

Backhoe Loader JCB விலை:

  • இதனுடைய விலை குறைந்தபட்சம் 24 லட்சம் முதல் அதிகபட்சம் 34 லட்சம் வரை இப்போது இருக்கும் காலம்கட்டம் வரை இருக்கிறது.
  • இதில் பழைய JCB விலை 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை உள்ளது அதனையும் நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.
  • ஜேசிபியில் உள்ள நன்மை என்றால் இதில் பழைய விலையில் உள்ள ஜேசிபி தவணை முறையில் விற்கிறார்கள். அதனால் நீங்கள் இந்த தொழில் செய்தால் நஷ்டம் ஏதும் உங்களுக்கு ஏற்படாது.
டாப் 10 சிறு தொழில்கள்

JCB Income Per Month in Tamil:

  • இந்த தொழில் தொடங்குபவர்கள் லாபம் நன்றாக கிடைக்கும். ஏனென்றால் இந்த தொழில் ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வேலை என்றால் Rs.8,000/- வருமானம்.
  • ஒரு மணி நேரத்திற்கு Rs.1,000 முதல் Rs.1,200/- வரை சம்பளம் வாங்குவார்கள். முக்கியமாக கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு Rs.1,000 ரூபாய் வாங்குவார்கள். நகர்ப்புறங்களில் Rs.1,200 ரூபாய் வாங்குகிறார்கள்.
  • ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வேலை என்றால் Rs.8,000/- ரூபாய் சம்பாதிக்கலாம். மாதத்திற்கு Rs. 2,480,00/- வரை சம்பாதிக்காலாம்.
  • அதுமட்டுமில்லாமல் மணி கணக்கு தான் வாடகை என்றால் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்றாலும் அதற்கும் வாடகை வாங்குகிறார்கள் என்கிறார்கள். இதன் மூலம் தனியாக ஒரு வருமானம் கிடைக்கும்.

முதலீடு:

  • ஒரு  நாளுக்கு டீசல்: 120 லிட்டர் போட்டால் 8 நேரம் வேலை செய்ய முடியும். ஓட்டுநர் சம்பளம் ஒரு நாளுக்கு 1,000/- வாங்குவார்கள்.
  • ஒரு நாளுக்கு 8,000/- வருமானம் என்றால் வாகனம் மற்றும் ஓட்டுநர் செலவுகள் மொத்தமாக 4,000/- செலவுகள் ஆகும்.
  • லாபம் 4,000/- என்றால் மாதத்திற்கு 1,20,000/- கிடைக்கும்.
  • நீங்கள் நம்பி தாராளமாக இந்த தொழிலை நடத்தலாம் உங்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும் நஷ்டத்திற்கு எந்த வகையிலும் வாய்ப்பு இருக்காது.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 
Advertisement