தினமும் 2,500 ரூபாய்க்கு மேல் வரையும் சுலபமாக வருமானம் பெற இந்த தொழிலை செய்து பாருங்கள்

low investment high profit business in tamil

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்கள்

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில்  ஒரு அருமையான பிஸ்னஸ் பற்றித்தான் தெரிந்துகொள்ளபோகிறோம். இந்த பிஸ்னஸ் யார் வேண்டுமானாலும் செய்து வரலாம்.  மேலும் இந்த பிஸ்னஸ் போட்டி இல்லாத தொழில் என்றும் கூட சொல்லலாம். குறிப்பாக இந்த பிஸ்னஸை ஆண்கள் செய்து வந்தால் அதிகமான லாபத்தை பெறலாம். மேலும் அவை என்ன பிஸ்னஸ் என்றும் அவற்றை தொடங்குவதற்கு தேவைப்படும் முதலீடுகள் எவ்வளவு என்றும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

வீட்டில் இருந்தபடியே மாதம் 1,00,000 ரூபாய் வரையும் சுலபமாக சம்பாதிக்கலாம்

Cotton Candy Making Business in Tamil:

இன்றைய பதிவில்  தெரிந்துகொள்ளப் போகின்ற  பிஸ்னஸ் என்னவென்றால் அனைவரும் சாப்பிட கூடிய ஒரு தின்பண்டம் தான். அதாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக விரும்பி சாப்பிட கூடிய பஞ்சுமிட்டாய். இந்த பஞ்சுமிட்டாய்களை அதிகமாக மக்கள் போக்குவரத்து இருக்கும் இடங்களில் அதனை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிகமாக வருமானத்தை பெறலாம்,  அல்லது நீங்கள் வீட்டில் இருந்தபடியே  இந்த பஞ்சுமிட்டாய்களை தயாரித்து பல இடங்களுக்கு விற்பனை செய்யலாம்.

தேவைப்படும் முதலீடு மற்றும் வரக்கூடிய வருமானம்:

இந்த பஞ்சுமிட்டாய் பிஸ்னஸை தொடங்குவதற்கு உங்களுக்கு தேவைப்படும் முதலீடு  3,300 ரூபாய் மட்டும்தான். ஆனால் தினசரி கிடைக்க கூடிய வருமானம் 2,500 ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. நீங்கள் விற்பனை செய்யும் பஞ்சுமிட்டாயை பொறுத்து அதிகமான லாபத்தை பெறலாம்.

Cotton Candy Making Machine in Tamil:

இந்த பஞ்சு மிட்டாய்களை தயாரிப்பதற்கு Candy Making Machine தேவைப்படுகிறது. இந்த மெஷினின் விலை 3,500 ரூபாய் மட்டும் தான். இந்த Candy Making Machine இரண்டு முறையில் பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது இந்த மெஷினை கேஸ் கொண்டும் பயன்படுத்தி கொள்ளலாம் அல்லது கைகளை வைத்து கூட ஆப்ரேட்டிங்  செய்யலாம். மேலும் இந்த Candy Making மெஷினை ஆன்லைன் மூலமாகவும் வாங்கிக் கொள்ளலாம். இந்த பஞ்சு மிட்டாய்களை ஒரு மணி நேரத்தில் 45 –க்கும் மேல் பஞ்சுமிட்டாய்களை தயாரிக்க முடியும்.

தேவைப்படும் மூலப்பொருள்:

இந்த பஞ்சுமிட்டாய்களை தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருள் என்னவென்றால் வெள்ளை சர்க்கரை, Candy Stick, பேக்கிங் கவர் போன்றவை தேவைப்படுகின்றன.

விற்பனை செய்யும் முறை:

இந்த பஞ்சு மிட்டாய்களை வீட்டில் இருந்து தயாரித்து விற்பனை செய்யும் பொழுது பெட்டிக்கடைகள், சூப்பர் மார்க்கெட்,  மிட்டாய் கடைகள், பள்ளி மட்டும் கல்லூரி இருக்கும் இடங்கள் மற்றும் மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் இடங்களில் விற்பனை செய்யும் பொழுது தாறுமாறான லாபத்தை பெறலாம்.

மேலும் நீங்கள் இந்த பஞ்சுமிட்டாயை ஆர்டர் எடுத்து கூட செய்யலாம். அதாவது திருமணம், பிறந்த நாள்  கொண்டாட்டம் போன்ற வீட்டில் நடக்க கூடிய விசேஷங்கள் பொழுது பஞ்சு மிட்டாய் ஆர்டர் எடுத்து செய்வதினால்  அதிகமான லாபத்தை பெற முடியும்.  எனவே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் சற்று யோசித்து முடிவெடுத்து செய்து பாருங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil