No Investment Business in Tamil
சுயதொழில் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை பலரிடம் உள்ளது. ஆசை மட்டும் இருந்தால் போதாது. தாரகன் யோசனைகளும் இருக்க வேண்டும். இந்த தொழில் செய்யலாமா அந்த தொழில் செய்யலாம் என்று யோசிக்க கூடாது. ஒரு தொழில் செய்ய போகிறீர்கள் என்றால் அந்த தொழில் செய்வதற்கு முதலீடு மற்றும் அந்த தொழில் செய்தால் லாபம் கிடைக்குமா.! வருங்காலத்தில் அதற்கான Demand இருக்குமா என்றேல்லாம் ஆராய்ந்து செயல்பட வேண்டும். மேலும் சில நபர்களுக்கு யோசனைகளை இருக்கும் ஆனால் முதலீடு செய்ய முடியாது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் முதலீடு இல்லாமல் செய்யும் தொழில்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Drawing Business Ideas:
உங்களுக்கு தெரிந்த கலைகளை மற்றவர்களுக்கு சொல்லி கொடுப்பதால் பணம் சம்பாதிக்க முடியும். மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்கும் கலைகளில் வரைபடம் சொல்லி கொடுக்க வேண்டும். அந்த வகையில் குழந்தைகளுக்கு ஓவியம் வரைவதற்கு சொல்லி கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
Car Driver:
உங்களுக்கு வாகனம் ஓட்ட தெரிந்தால் இந்த தொழில் செய்யலாம். உடனே அதற்கு ஏதவாது வாகனம் வாங்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்க கூடாது. சில நபர்கள் கார் வைத்திருப்பார்கள் ஆனால் வாகனம் ஓட்ட தெரியாமல் இருக்கும். கார் ஓட்ட தெரியாதவர்கள் வெளியில் செல்லும் போது ட்ரைவரை எதிர்ப்பார்கள். அவர்களுக்கு நீங்கள் டிரைவராக இருப்பதனால் நேரத்தை பொறுத்து சம்பாதிக்க முடியும்.
லட்சக்கணக்கில் சம்பாதிக்க இந்த தொழில் ஒன்று போதும்…! காலத்திற்கும் நிலைத்து நிற்கும்..!
Proof Reading Business:
பிழை திருத்தல் தொழில் சிறப்பானதாக இருக்கும். பத்திரிக்கை நிறுவனம், பிரின்டிங் செய்யும் இடம் போன்றவற்றில் இந்த தொழில் Demand ஆக இருக்கும். செய்திகளில் இருக்கும் பிழைகளை திருத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
Tuition Centre:
கல்வி என்றுமே அழியாத தொழில். இந்த தொழில் செய்வதற்கு முதலீடு ஏதும் தேவையில்லை. உங்கள் வீட்டிலேயே சிறிய இடம் இருந்தால் போதுமானது. நீங்கள் எந்த பாடத்தில் சிறந்து விளங்குவீர்களோ அதை பற்றி மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதனால் பணம் சம்பாதிக்க முடியும். இதில் வகுப்பை பொறுத்து வருமானம் மாறுபடும்.
சொல்லி கொடுத்தால் போதும்.. அளவில்லாமல் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |