பழைய நாணயங்கள் இன்றைய மதிப்பு 2022

Old Coin Value Tamil

பழைய ரூபாய் நோட்டு விலை | Old Indian Coins Value List Price in Tamil

Old Coin Value Tamil:- வணக்கம் நண்பர்களே.. உங்கள் வீட்டில் இருக்கும் பழைய நாணயங்களை விற்பனை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று உங்களுக்கு தெரியுமா? ஆமாம் பழைய நாணயங்கள் அல்லது நோட்டுகளை சேகரிக்கும் நபர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. நீங்கள் பணம் சம்பாதிக்க சிறந்த வாய்ப்பு. இப்போதெல்லாம் பலருக்கு பழங்கால பொருட்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளது. ஆகவே இந்த நாணயங்களின் மதிப்பு இப்போது மிகவும் அதிகரித்துள்ளது. பழைய நாணயத்தை கொடுத்தால், பல லட்சம் ரூபாய் பெறலாம். அதோடு சில அரிய நாணயங்கள் உங்களை ஒரு கோடீஸ்வரராக்கும். சரி இந்த பதிவில் பழைய நாணயங்கள் இன்றைய மதிப்பு என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Old Coin Value Tamil

பழைய நாணயங்களின் மதிப்பு:

வைஷ்ணோ தேவியின் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் இருந்தால் அதைக் கொடுத்து 1.5 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதிக்கலாம்.

பழைய 1 ரூபாய், 2 ரூபாய் நாணயங்கள் மற்றும் ரூ1, ரூ2, ரூ5 நோட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்.

நமது இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் அதாவது பிரிட்டிஷ் ஆட்சியின் போது அச்சிடப்பட்ட 1ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ 2 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும் அதில் விக்டோரியா மகாராணியின் படம் அச்சிடப்பட்டிருக்கும்.

1918-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசர் கிங் ஜார்ஜ் படத்துடன் கூடிய 1 ரூபாய் நாணயத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் உங்களிடம் பழைய 5 ரூபாய் நோட்டு இருந்தால் அதைக் கொடுத்து ரூ.30,000 வரையில் சம்பாதிக்கலாம். இருப்பினும் இந்த ரூபாய் நோட்டில் டிராக்டர் படம் இருக்க வேண்டும். அதேபோல, இதில் 786 என்ற சீரியல் நம்பர் இருக்க வேண்டும்.

உங்களிடம் 1977- 1979 காலக்கட்டத்தில் அச்சடிக்கப்பட்ட 1 ரூபாய் பணம் இருந்தால் நீங்கள் 45000 வரை சம்பாதிக்கலாம்.

இந்தியாவில் 1994 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 2 ரூ நாணயத்தில் ஒருபுறம் இந்தியக் கொடி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் இது தொடர்பான இணையதளத்தில் அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:

இந்த நாணயத்தின் மதிப்பு வாங்குபவர் மற்றும் விற்பவரை சார்ந்து அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பழைய நாணயங்கள் விற்பனை செய்வது எப்படி? | How to Sell Old Coins in Tamil

உங்களிடம் மேல் கூறப்பட்டுள்ள பழைய நாணயங்கள் இருக்கிறது என்றால் ஆன்லைனில் இது தொடர்பான நிறைய இணையதளங்கள் இருக்கின்றன, ஆகவே அவற்றில் நீங்கள் இந்த நாணயங்களை விற்பனை செய்யலாம். இருப்பினும் இதற்கு முதலில் நீங்கள் ஆன்லைன் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். நாணயத்தின் புகைப்படத்தைக் கிளிக் செய்து தளத்தில் பதிவேற்றவும். அதன் பிறகு, உங்கள் முகவரி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை  வழங்க வேண்டும். வலைத்தளம் உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை சரிபார்த்து பதிவு செய்யவும்.

அதன்பிறகு இந்த பழைய நாணயங்களை வாங்குபவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். உங்களுக்கு அதிர்ஷடம் அடித்தால் லட்சங்களுக்கு விற்கலாம். அந்த வலைதளத்தின், கட்டணம் மற்றும் விற்பனை விதிமுறைகளின்படி நீங்கள் உங்கள் நாணயத்தை விற்கலாம்.

இந்த பதிவை பொறுமையாக படித்ததற்கு மிக்க நன்றி..

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com