வீட்டில் இருந்தபடியே வாரம் ரூபாய் 7,500 வரை லாபம் தரும் ஒரு சிறந்த தொழில்..!

work from home packing jobs without investment in tamil

வீட்டில் இருந்தபடியே வாரம் ரூபாய் 7,500 வரை சம்பாதிக்கலாம்..!

வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய வியாபாரம் பதிவில் வீட்டில் இருந்தபடியே வாரம் ரூபாய் 7,500 வரை சம்பாதிக்கக்கூடிய ஒரு சிறந்த தொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க வேண்டும் என்பவர்களுக்காகத்தான் இன்றைய பதிவு. அப்படி என்ன தொழில் அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிய முழு விவரங்களை இன்றைய பதிவில் காணலாம். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

வீட்டில் இருந்தபடியே அதிக லாபம் தரக்கூடிய தொழில்:

முதலில் அது என்ன தொழில் என்றால் ஏலக்காய் மற்றும் உலர் பழங்களை பேக்கிங் செய்து தரக்கூடிய தொழில் தான். இந்த பேக்கிங் தொழிலை நீங்களே சுயமாகவும் செய்யலாம் அப்படி இல்லையென்றால் இதற்கென்று பல கம்பெனிகள் உள்ளன அவற்றுடன் டையப் செய்து கொண்டும் செய்யலாம்.

இந்த பேக்கிங் தொழிலின் மூலம் உங்களுக்கு வாரம் 7,500 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். முதலீடு என்று பார்த்தீர்கள் என்றால் பேக்கிங் செய்வதற்கான மிஷின் வாங்குவீர்கள் அதன் விலை 800 – 900 ரூபாய் தான் வரும்.

மேலும் நீங்களே சுயமாக இந்த பேக்கிங் தொழில் செய்கிறீர்கள் என்றால் அதற்கு தேவையான மூலப்பொருட்களை வாங்குவீர்கள்.

அப்படி இல்லாமல் நீங்கள் ஒரு கம்பெனியுடன் டையப் செய்து கொண்டு செய்கிறீர்கள் என்றால் அந்த கம்பெனியே நீங்கள் பேக்கிங் செய்ய வேண்டிய மூலப்பொருட்களை தந்து விடுவார்கள். நீங்கள் அந்த மூலப்பொருட்களை அவர்கள் கூறியுள்ள அளவிற்கு பேக்கிங் செய்து தந்தால் மட்டும்போதும்.

நீங்கள் எவ்வளவு பேக்கிங் செய்கிறீர்களோ அதற்கான பணத்தை உங்களுடைய வங்கி கணக்கில் போட்டு விடுவார்கள்.

இந்த பேக்கிங் தொழிற்கென்று தனியாக ஒரு இடம் தேவையில்லை உங்கள் வீட்டிலேயே ஒரு சிறிய இடம் இருந்தால் மட்டும் போதும். குறிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும்.

பேக்கிங் தொழில்:

நீங்கள் இந்த ஏலக்காய் மற்றும் உலர் பழங்கள் பேக்கிங் தொழிலை சுயமாக செய்கிறீர்கள் அதற்கென்று தேவைபடும் மூலப்பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யக்கூடிய சந்தைகளில் இருந்து வாங்கிக் கொண்டு அவைகளை நீங்கள் சிறிய சிறிய பாக்கெட்களாகவும் பேக்கிங் செய்யலாம்.

அப்படி இல்லையென்றால் பெரிய அளவிலான பாக்கெட்களாகவும் பேக்கிங் செய்து உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கொடுத்து விற்பனை செய்து லாபம் பெறலாம்.

இதையும் படியுங்கள் => பேக்கிங் செய்வதன் மூலம் தினமும் ரூ.1200 வரை சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022