High Profit Business Ideas
என்ன தொழில் செய்வது என்பது பலருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏனென்றால் என்ன தொழில் செய்வது, அதற்கான முதலீடு எவ்வளவு மற்றும் மூலப்பொருள் எவ்வளவு என்று பல விஷயங்கள் இருப்பதால் அதற்கான சரியான தீர்வு இன்னும் நிறைய நபர்களுக்கு கிடைக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நாம் சுயதொழில் செய்வதை விட மாத சம்பளத்திற்கு வேலைக்கு சென்று விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆகையால் இன்றைய பதிவில் அதிக லாபம் தரக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்று பார்த்தால் அதிக அளவில் உள்ளது. சரி வாருங்கள் அது என்ன தொழில் எவ்வாறு அதனை செய்வது போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
அதிக லாபம் தரும் சிறு தொழில்:
மக்கள் தினந்தோறும் நிறைய வகையான பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதில் ஏதாவது ஒரு பொருளை மட்டும் ஒரு கடையாக வைத்தால் போதும் நல்ல வருமானம் பெற்று விடலாம்.
அந்த வகையில் இன்று Plastic Items Business-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த நவீன காலத்தை பொறுத்தவரை பெண்கள் பெரும்பாலும் அதிகமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். ஆகவே அதனை எப்படி ஒரு தொழிலாக செய்வது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான முதலீடு:
நீங்கள் Plastic Items Business-ஐ செய்ய வேண்டும் என்றால் அதற்கு தோராயமாக 10,000 ரூபாய் முதலீடு தேவைப்படும்.
தேவையான மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கான மூலப்பொருள் என்பது பிளாஸ்டிக் பொருட்கள் மட்டும் தான். ஆகையால் உங்களுக்கு விருப்பமான மற்றும் தரமான பிளாஸ்டிக் பொருட்களை பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.
மேலும் இந்த கடைக்கான GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
தேவையான இடம்:
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் ஒரு பெரிய அளவிலான கடை கட்டாயமாக தேவைப்படும்.
இதையும் படியுங்கள்⇒ மாதம் 2,00,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை செய்வதற்கு முதலீடு வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும்..
How to Start Plastic Items Business in Tamil:
முதலில் பிளாஸ்டிக் பொருட்களில் நிறைய வகைகள் இருப்பதால் அதில் அதனை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் Size மற்றும் மாடல் இந்த இரண்டினையும் கவனமாக பார்த்து Wholeasale முறையில் வாங்கி கொள்ள வேண்டும்.
அதன் பிறகு உங்களுடைய கடைக்கு ஒரு சிறிய விளம்பரம் கொடுத்து விடுங்கள். இவ்வாறு செய்த பிறகு மொத்தமாக 100 ரூபாய்க்கு வாங்கும் பொருட்களுக்கு 10 மற்றும் 20 ரூபாயில் உள்ள பொருளை இலவசமாக தள்ளுபடி முறையில் கொடுங்கள். அந்த தள்ளுபடி முறையினையும் சில குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் தான் கொடுக்க வேண்டும்.
இதனை போல நீங்கள் செய்தால் போதும் நல்ல வருமானம் பெறலாம்.
இதையும் படியுங்கள்⇒ கையில் இருக்கும் காசை முதலீடு செய்தால் அதனுடன் வட்டியும் கிடைக்கும் நல்ல வருமானமும் கிடைக்கும்..
வருமானம்:
இந்த தொழிலில் நிறைய வகைகள் மற்றும் மாடல் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு நீங்கள் லாபம் மற்றும் வருமானம் இரண்டினையும் பெறலாம். மேலும் கல்யாணத்திற்கு என்றால் நிறைய பிளாஸ்டிக் பொருட்கள் வாங்குவார்கள். அதுபோன்ற நேரங்களில் நிறைய ஆர்டர் வந்தால் அதற்கு ஏற்றவாறும் வருமானம் பெறலாம்.
ஆகையால் இந்த தொழிலில் மாதந்தோறும் தோராயமாக 10,000 முதல் 20,000 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |