பெண்கள் இந்த தொழிலை செய்தால் தினமும் 2000 முதல் வருமானம் பெறலாம்

Advertisement

பெண்களுக்கான சிறு தொழில்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் பெண்களுக்கான சிறந்த தொழிலை பற்றித்தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த தொழில் பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு சிறந்த தொழிலாக இருக்கும். வெளியில் வேலை செய்யும் பெண்கள் கூட வீட்டிற்கு வந்ததும் இந்த தொழிலை ஒரு பார்டைமாக செய்து வரலாம்.  இந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்துவரலாம் , ஆனால் குறிப்பாக பெண்களுக்கு இந்த தொழில் கைகொடுக்கும். அப்படி என்ன தொழிலா இருக்கும்   என்று ஆர்வமாக இருக்கிறதா. மேலும் இந்த தொழிலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறைந்த முதலீட்டில் அதிகளவு லாபம் பெற்று வாழ்க்கையில் முன்னேற அருமையான தொழில்கள்..!

 

சத்துமாவு தொழில்:

வீட்டில் இருக்கும்  பெண்கள் வேலை நேரங்கள் முடிந்தவுடன். இந்த சத்துணவு மாவுகளை தயாரித்து பல இடங்களுக்கு விற்பனை செய்த்து வரலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் உடல் நலத்திற்க்காக அதிகமாக வாங்கப்படும் ஒரு உணவு பொருள் தான் இது.  மேலைநாட்டு உணவு  தொழில்களான பிசா, பர்கர்களுக்கு மாற்றாக , இயற்கை உணவுகளின் விழிப்புணர்வுகள் அதிகமாக இருப்பதால், இந்த சத்துணவுமாவுகளை  மக்கள் அதிகம் விரும்பி வாங்குவார்கள்.

தேவைப்பாடு இட வசதி:

இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்கள் வீட்டிலே சிறியதாக இடம் இருந்தால் போதும். இந்த பிசினஸ் கொஞ்சம் வளர்ச்சி அடைந்த பிறகு தனியாக ஒரு இடம் கூட அமைத்து பெரியதாக செய்த்து வரலாம்.

சத்துமாவு தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • சத்துமாவு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை மளிகை கடைகளில் வாங்கி கொள்ளலாம். அதாவது சிறுதானிய வகைகள், பயிறு வகைகள், உலர்ந்த பழங்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்ளவேண்டும்.
  • சத்துமாவை தயாரிக்க ராகி, சோளம், கம்பு, பாசி பயிறு, கொள்ளு போன்றவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊறவைத்து, அவை நன்றாக  ஊறிய பிறகு தண்ணீரில் இருந்து வடிக்கட்டி கொண்டு, ஒரு பெரிய துணியில் அந்த தானியங்களை கட்டி வைத்து கொள்ளவேண்டும்.
  • கட்டிவைத்த தானியங்களை 12 மணி நேரம் கழித்து பார்த்த பிறகு தானியங்கள் முழுவதும் முளைகட்டி இருக்கும். சிறுதானிய வகைகளையும், உலர்ந்த பழங்களையும் வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளவேண்டும்.
  • அதன் பிறகு இந்த சத்துமாவுக்கு தேவையான தானியங்களை மாவு மெஷினில் அரைத்து வாங்கிக்கொண்டு அதை ஆரவைக்கவும்.

பேக்கிங் செய்யும் முறை:

மெஷினில் அரைத்து வந்த சத்துமாவுகளை கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ இரண்டு கிலோ என்ற  கிலோ கணக்கில் மாவை பேக்கிங் செய்து. அருகில் இருக்கும் சூப்பர் மார்க்கெட், மளிகை கடை, சர்வத்தைய விற்பனைய நிலையங்கள் போன்ற கடைகளுக்கு சத்துமாவுக்களை விற்பனை செய்து வரலாம்.

கிடைக்க கூடிய வருமானம்:

ஒரு கிலோ சத்துமாவை 100 ரூபாய் முதல் 150 வரை விற்பனை செய்யலாம். இதன் மூலமாக தினமும் ஒரு நாளைக்கு 2000 வரை பெறலாம். இதை பெரியவர்கள் வரை குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவதால் நல்ல முறையில் சுத்தமாக சத்துமாவுகளை செய்வது அவசியம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement