தினமும் அதிரடி வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை இப்போதே தொடங்கினால் நல்ல முன்னேற்றம் அடையாளம்..!

Advertisement

தினசரி வருமானம் தரும் தொழில்

புதிதாக நாம் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு என்ன தொழில் செய்வது என்ற ஒரு குழப்பம் இருக்கும். அதற்கு அடுத்ததாக நாம் தொடங்கும் அந்த தொழிலுக்கு போட்டியாக யாரும் வரக்கூடாது என்று நினைப்பார்கள். இதற்கு அடுத்ததாக நாம் செய்யும் தொழில் எந்த காலத்திலும் சோர்ந்து விடாமல் முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படும் அனைவருக்கும் ஒரு கனவாக இருக்கும். உங்களுக்கு உதவும் வகையில் காலத்திற்கும் என்று நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு தொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Small Business High Profit Ideas in Tamil:

பெண்கள் மற்றும் ஆண்கள் இருவரும் வீட்டில் இருந்து செய்யக்கூடிய பொட்டு கடலை தொழில் தொடங்குவது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இந்த தொழிலுக்கு Demand எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். இந்த பொட்டு கடலை மளிகை கடை, Department Store, சந்தை, Wholesale விற்பனை சிறிய ஹோட்டல் மற்றும் பெட்டி கடை ஆகிய இடங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இது உணவு பொருள் என்பதால் மக்கள் அனைவரும் அதிகமாக உபயோகப்படுத்த கூடிய பொருள்களில் ஒன்றாக இருக்கிறது. ஆகவே இந்த தொழிலை மட்டும் நீங்கள் செய்தால் போதும் அதிரடியான லாபத்தை பெறலாம்.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

  • கொண்டை கடலை
  • Peeling Machine இதனுடைய விலை தோராயமாக 1,50,000 முதல் 2,00,000 வரை இருக்கும்.
  • Roasting Machine இதனுடைய விலை தோராயமாக 65,000 முதல் 1,00,000 வரை இருக்கும்.

இந்த தொழிலை தொடங்குவதற்கு தேவைப்படும் மிஷினில் விலை அதன் மாடலை பொறுத்து வேறுபாடும். தோராயமாக இந்த தொழிலை தொடங்குவதற்கு முதலீடு மொத்தம் 3,50,000 தேவைப்படும்.

நீங்கள் இந்து மிஷின் வாங்கும் இடத்தில் இதற்கான பயிற்சி அளிக்கப்படும்.

பொட்டுக்கடலை தொழிலை தொடங்குவதற்கு FSSAI License மற்றும் GST தேவைப்படும்.

தொழில் தொடங்க தேவையான இடம்:

இந்த தொழிலை தொடங்குவதற்கு வீட்டில் ஒரு பகுதியில் பெரிய அளவிலான இடம் மட்டும் போதும்.

இதையும் படியுங்கள்⇒ எந்த ஒரு முதலீடும் தேவை இல்லை..! தொழில் செய்தால் லாபம் கிடைக்கும் அவ்வளவு தாங்க..!

தயாரிக்கும் முறை:

daily income business in tamil

 

முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள கொண்டை கடலையை சுத்தம் செய்து அதனை Roasting Machine- ல் கொண்டை கடலை கொட்டுவதற்கான இடத்தில் கொட்டினால் போதும் அதன் மேலே இருக்கும் தோல்கள் அனைத்தும் நீங்கி வெளியே வந்து விடும்.

அடுத்து தோல் உரித்து உள்ள கொண்டை கடலையை Peeling Machine-ல் போட்டால் போதும் உங்களுக்கு பொட்டு கடலை தயாராகிவிடும்.

இப்போது தயார் செய்து வைத்துள்ள பொட்டு கடலையை பேக் செய்து கொள்ளுங்கள். நீங்கள் கொண்டை கடலை வாங்கும் அளவினை பொறுத்து உங்களுக்கு பொட்டு கடலை கிடைக்கும்.

 விற்பனை செய்யும் முறை:

தினசரி வருமானம் தரும் தொழில்

1 கிலோ பொட்டு கடலையின் விலை தோராயமாக 90 ரூபாய் முதல் 120 ரூபாய் என விற்கப்படுகிறது. ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 30 கிலோ பொட்டு கடலை விற்பனை செய்தால் தோராயமாக ரூபாய் 3,150 முதல் 3,600 வரை நீங்கள் சம்பாதிக்கலாம்.

இது மாதிரி நீங்கள் ஒரு நாளைக்கு சம்பாதித்தீர்கள் என்றால் ஒரு மாதத்திற்கு தோராயமாக 94,500 ரூபாய் முதல் 1,08,000 ரூபாய் வரையிலான அதிரடியான லாபத்தை பெறலாம்.

இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலை மட்டும் செஞ்சு பாருங்க இப்போ இல்லை எப்போதுமே Demand இருந்து கொண்டே இருக்கும்…!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement