2 மணி நேரம் வேலை தினமும் 4000 ரூபாய் லாபம் அருமையான தொழில்..!

Advertisement

தினமும் வருமானம் தரும் தொழில் | Small Business Ideas in Tamil Nadu

Small Business Ideas in Tamil Nadu – புதிதாக தொழில் துவங்க நினைக்கும் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. இன்று நாம் ஒரு புதிய தொழில் வாய்ப்பை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழிலை பெண்கள், ஆண்கள் என இருவரும் செய்யலாம்.. இதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.. உங்கள் உங்கள் ஊரில் புதிதாக ஒரு தொழில் தொடங்கி அதில்  நல்ல வருமானம் பெற வேண்டும் என்றால் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம்.. சரி வாங்க இது என்ன தொழில், எவ்வளவு முதலீடு தேவைப்படும், இதன் மூலம் தினமும் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

என்ன தொழில்?

Small Business Ideas in Tamil Nadu – இது ஒரு உணவு சார்ந்த தொழில் தான்.. அதாவது தேங்காயில் இருந்து பால் எடுத்து விற்பனை செய்யும் தொழில் தான்.. இது ஒரு புதிய தொழிலாக இருக்கும்.. தேங்காய் பால் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு பணமாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் உணவு சார்ந்த எந்த ஒரு தொழிலை செய்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். ஆக தயக்கம் இல்லாமல் இந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.

இடம்:

வீட்டில் அல்லது ஒரு தள்ளுவண்டி கடை அமைத்து கூட இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். தள்ளுவண்டி கடை என்பதால் மக்கள் கூட்டம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த தள்ளு வண்டியை எடுத்து சென்று நன்றாக விற்பனை செய்ய முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் 3000 வரை வருமானம் தரும் தொழில்.. ஆண், பெண் இருவருமே வீட்டில் தயார் செய்து விற்பனை செய்யலாம்..!

மூலப்பொருட்கள்:

தேங்காய் தான் இந்த தொழிலுக்கான மூலப்பொருள் ஆகும். அதன்பிறகு கிளாஸ், நாற்காலி, டேபிள், மிக்சி, பாத்திரங்கள் என்று இது போன்ற பொருட்கள் தேவைப்படும்.

முதலீடு:

குறைந்தபட்சம் நீங்கள் 10 முதலீடு செய்தாலே போதும் இந்த தொழிலை ஆரம்பித்துவிடலாம்.

தேங்காய் பால் எடுப்பதற்கு இயந்திரங்களுக்கு இருக்கிறது, இருப்பினும் அதன் ஆரம்ப விலையே 50000 ஆகும், அதேபோல் தேங்காய் துருவுவதற்கும் இயந்திரம் இருக்கும் அதன் விலை 5000 ரூபாய் ஆகும்.. நீங்கள் விரும்பினால் இந்த இயந்திரத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது தொழில் நன்கு வளர்ச்சி அடைந்தபிறகு கூட இந்த இயந்திரத்தை வாங்கி பயன்படுத்தலாம்.

வருமானம்:

ஒரு நாளுக்கு 20 லிட்டர் தேங்காய் பால் தயார் செய்து விற்பனை செய்தீர்கள் என்றாலே 4000 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

அதாவது ஒரு கிளாஸ் தேங்காய் பாலின் விலை 20 ரூபாய் என்று வைத்துக்கொண்டோம் என்றால், ஒரு நாளுக்கு 200 கிளாஸ் தேங்காய் பால் விற்பனை ஆகிவிட்டது என்றாலே நமக்கு 4000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

எங்கு விற்பனை செய்யலாம்:

மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை, பிரபலமான கோயில்கள், பூங்கா இது போன்ற இடங்களில் சென்ற் விற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
பேக்கிங் செய்வதன் மூலம் தினமும் ரூ.1200 வரை சம்பாதிக்கலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement