தினசரி வருமானம் தரும் தொழில்
அனைவருக்கும் எப்படியாவது நாமும் புது தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். சரி அப்படி தொழில் தொடங்கலாம் என்று நினைத்தாலும் அதற்கான முதலீடு, தேவையான இடம் மற்றும் அந்த தொழிலை எப்படி தொடங்குவது போன்றவற்றை பற்றி யோசித்து தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவார்கள். அதனால் தொழில் தொடங்க வேண்டும் என்ற உங்களுடைய ஆசைக்கு இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருக்கும். ஆகையால் 2023-ல் நீங்கள் கண்டிப்பாக தொழில் தொடங்கி அதன் மூலம் ராஜாவாக வேண்டும் என்றால் இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Small Investment Business Ideas Tamil:
உடலுக்கு நன்மை தரக்கூடிய மற்றும் அதிக லாபம் தரக்கூடிய இலந்தை பழத்தில் தொழில் தொடங்குவது பற்றி பார்க்கப்போகிறோம்.
முதலீடு:
இந்த தொழிலை தொடங்குவதற்கு முதலீடு 1500 ரூபாய் இருந்தால் போதும். அதுமட்டும் இல்லாமல் இத்தகைய Ber Fruit Jam Business-யை தொடங்குவதற்கு எந்த வித மிஷினும் தேவையில்லை.
தொழில் தொடங்க தேவையான இடம்:
குறைந்த முதலீட்டில் உள்ள இந்த தொழிலை தொடங்குவதற்கு வீட்டில் சிறிய அளவில் 10×10 இடம் மட்டும் இருந்தால் போதும். அதன் பின்பு உங்களுடைய தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்த பிறகு தனியாக கடை அமைத்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- இலந்தை பழம்- 3 கிலோ
- பச்சை மிளகாய்- 20
- பெருங்காயத்தூள்- 4 1/2 ஸ்பூன்
- வெல்லம்- 750 கிராம்
- உப்பு- தேவையான அளவு
தயாரிக்கும் முறை:
முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள இலந்தை பழத்தை சுத்தமான தண்ணீரில் அலசி நன்றாக 1 நாட்கள் முழுவதும் வெயிலில் காய வைத்து விடுங்கள்.
அடுத்து இலந்தை பழத்தில் இருக்கும் கொட்டையை தனியாக எடுத்து விட்டு இலந்தை பழத்தின் மேல் இருக்கும் சதையினை மட்டும் ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு எடுத்துவைத்துள்ள 20 பச்சை மிளகையை சுத்தமாக அலசி மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.
இப்போது மிக்சி ஜாரில் இலந்தை பழம் சதை, உப்பு தேவையான அளவு மற்றும் 4 1/2 பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளுங்கள்.
கடைசியாக 750 கிராம் வெல்லத்தை நன்றாக சிறு சிறு துண்டாக நுணுக்கி அதையும் மற்றும் பச்சை மிளகாய் பேஸ்டையும் அரைத்து வைத்துள்ள இலந்தை மாவுடன் சேர்த்து கலந்து அடை போல செய்து காய வைத்து விடுங்கள்.
இப்போது நீங்கள் தயார் செய்த இலந்தை பழ அடையை 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் பாலித்தீன் கவரில் பேக் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
நீங்கள் தயார் செய்த இலந்தை அடையில் தோராயமாக ஒரு நாளைக்கு 5 ரூபாய் பாக்கெட்டில் 50-ம் மற்றும் 10 ரூபாய் பாக்கெட்டில் 50-ம் விற்பனை செய்தால் போதும் தோராயமாக 750 ரூபாய் சம்பாதிக்கலாம்.
இதேபோல நீங்கள் தினமும் விற்பனை செய்தால் ஒரு வாரத்திற்கு தோராயமாக 5,250 ரூபாயும் மற்றும் 1 மாதத்திற்கு 22,500 ரூபாயும் சம்பாதிக்க முடியும்.
உங்களுடைய விற்பனைக்கு ஏற்றவாறு இலந்தை பழத்தில் பொடி மற்றும் ஜாமும் தயார் செய்து விற்பனை செய்துக்கொள்ளலாம்.
இந்த இலந்தைஅடையை பெட்டி கடை, மளிகை கடை மற்றும் Department Store ஆகிய இடங்களில் மொத்தமாக விற்பனை செய்துக்கொள்ளலாம்.
பயன்கள்:
இன்றைய காலகட்டத்தில் எவ்வளவோ தொழில் நுட்பங்கள் வளர்ந்து கொண்டே இருந்தாலும் ஆரோக்கியம் என்பது அவ்வளவு சிறப்பாக இல்லை.
அதனால் அனைவரும் உடலுக்கு நன்மை தரக்கூடிய பொருளை தான் சாப்பிட விரும்புகின்றனர். ஆகையால் இன்றைய பதிவில் கூறியுள்ள இலந்தை அடையை உடலிற்கு சுண்ணாம்புச்சத்து மற்றும் கால்சியம் சத்தை அளிக்கிறது.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |