வீட்டிலேயே தொழில் தொடங்கி சம்பாதிப்பது எப்படி சற்றென்று ஒரு ஐடியா..?

சூப்பரான ஐடியா

அன்பான வணக்கம் இன்றைய பதிவில் சூப்பரான தொழிலை பற்றிய ஐடியா சொல்ல  தான் இந்த பதிவு. அனைவருக்கும் நெருக்கடியான சூழ்நிலைகளில் தான் வாழ்ந்து வருகிறார்கள். அனைவருக்கும் பிடித்ததை வாங்குவதற்கு தேவை பணம் ஆனால் எல்லாவறையும் குடும்பத்தில் உள்ளவர்களிடையே கேட்பதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். அதே நம்மிடம் பணம் இருந்தால் அனைத்தையும் நாமே வாங்கிக்கொள்ளலாம் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களுக்கு நீங்கள் ஆசை படுவதை வாங்கி கொடுக்கலாம் சரி நீங்கள் சொந்த காலில் நிற்பதற்கு சூப்பரான ஐடியா வாங்க அதனை படித்து தெரிந்துகொள்வோம்..!

தொழில் தொடங்குவது எப்படி?

நீங்கள் சூப்பரா சமையல் செய்வீர்களா அல்லது snacks செய்வீர்களா? அப்படி என்றால் இந்த தொழில் நீங்கள் தான் ராஜா. இந்த தொழிலை பெண்கள் அமைத்தும் செய்யவேண்டும் ஆண்கள் மட்டும் செய்யவேண்டும் என்று எந்த ஒரு கட்டாயமும் இல்லை இந்த தொழிலை இளைஞர் முதல் பெரியவர்கள் வரை இந்த தொழிலை செய்யலாம். முதலில் அந்த தொழில் தொடக்க என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி பார்போம் வாங்க..!

ஸ்டேப்- 1

முதலில் இந்த தொழிலை வீட்டிலே செய்யலாம். அப்படி என்ன தொழில் என்றால் Snacks Business தான். இந்த தொழிலை நீங்கள் வீட்டிலே செய்யலாம் அதற்கு தனியாக கடையோ அல்லது தனியாக இடமோ தேவையில்லை உங்களுடைய சமையல் கூடமே போதுமானது.

நீங்கள் இருக்கும் தெருவில் அதிகளவு உங்களுக்கு பழக்கம் இருந்தால் அது உங்கள் பக்கத்தில் உள்ளவர்களிடம் உங்களுடைய தொழிலை பற்றி சொல்லுங்கள் அதாவது நீங்கள் செய்ய இருக்கும் தொழிலை பற்றி சொல்லுங்கள் இப்படி அவர்களிடம் சொல்வதால் அவர்கள் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும் போது உங்களிடம் சுவையான snacks வாங்கி வந்து சாப்பிடுவது அவர்களுக்கும் ஈசியாக இருக்கும் உங்களுக்கும் மாலை நேரத்தில் பணம் சம்பாரிக்கவும் உதவியாக இருப்பார்கள்.

ஸ்டேப்- 2

snacks shop

முதலில் நீங்கள் மாலை நேரத்தில் குழந்தைகள் அதிகம் என்ன விரும்பி சாப்பிடுகிறார்களோ அதை செய்ய தொடங்குங்கள் எடுத்துக்காட்டாக: பஜ்ஜி, பணியாரம், போளி, பானிபூரி, காளான் இது போன்ற snacks செய்யுங்கள். ஆரோக்கியமாக செய்வது மிகவும் முக்கியம்.

தொழில் தொடங்குவது எப்படி

ஆரோக்கியம் என்று சொன்ன உடன் ஞாபகத்திற்கு வருவது. கருப்பு சுண்டல், கஞ்சி, கடலை, கோதுமை புட்டு போன்ற ஆரோக்கியமான snacks செய்து கொடுப்பது உங்கள் தொழிலில் மாற்றம் அடையும் அது போல் உங்கள் கடைக்கு என்று ரசிகர்களும் வருவார்கள்.

நீங்கள் வீட்டிலேயே இந்த தொழிலை செய்வதால் அதில் நபர்கள் உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது அக்கம் பக்கம் உள்ளவர்கள் தான் வாங்குவார்கள் அதனால் அவர்களுக்கு ஏற்ற விலையில் நீங்கள் விற்றாலும் புதிதாக வாங்குபவர்களுக்கு முதலில் வாங்கும் போது குறைந்த விலையில் கொடுத்து அவர்களை கவர்ந்து விட்டால் உங்களின் சுவையும் தரமும் மறுமுறை உங்கள் கடையை தேடி வரவைக்கும்.

snacks shop

எடுத்துக்காட்டாக: நீங்கள் வாங்கும் பஜ்ஜி மாவின் விலை 50 ரூபாய் இருந்தால் அதற்கு வாழைக்காய் ஒரு நாளைக்கு 5 வாழைக்காய் வாங்கினால் அதன் விலை 15 ரூபாய் இருக்கும். எண்ணெய் லீட்டர் 150 இருக்கும் மொத்தமாக இதற்கு மட்டும் 220 ரூபாய் ஆகும் என்றால் நீங்கள் இந்த பொருட்களை வைத்து எப்படியும் 50 பஜ்ஜி போடலாம். நீங்கள் ஒரு பஜ்ஜி 7 ரூபாய்க்கு விற்றால் 350 ரூபாய் கிடைக்கும் அப்படி பார்த்தால் உங்களுக்கு லாபம் 150 கிடைக்கும். இந்த எண்ணெயை வைத்து போண்டா போன்ற snacks  செய்துவிடலாம்.

ஒரு snacks இவ்வளவு லாபம் கிடைத்தால் நீங்கள் செய்யும் 5 snacks செய்து வந்தால் அதனை லாபத்தை பற்றி நீங்களே தெரிந்துகொள்ளலம்.

தொடர்ந்து செய்து வருவதால் நீங்கள் ஒரு சின்னதாக கடையை தொடக்க முடியும். அதே போல் இந்த தொழில் மட்டும் செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை உங்களுக்கு நன்றாக ஊறுகாய் செய்ய தெரியும் என்றால் இந்த க்ளிக் செய்து தெரிந்துகொள்ளவும். ⇒ பெண்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்க சிறந்த தொழில்கள்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022