Advertisement
காலையில் சம்பாதிக்க வழிகள் | Tea Shop Business Ideas in Tamil
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் யோசனையாக இருக்கும் பின்வரும் காலங்களின் எப்படி வாழ்க்கையை வாழ போகிறோம் என்று..! ஆனால் எப்போதாவது அதற்கான வழிகளை தேடியதுவுண்டா..! இனி யாரும் யோசிக்க வேண்டாம் எந்த காலத்திலும் நஷ்டமே ஏற்படாது துணிந்து இந்த தொழிலை தொடங்கலாம்..! அதற்கான முதல் அடியை பார்ப்போம் வாங்க..!
டீ கடை தொழில்:
- டீ கடை தொழில் தொடங்க வேண்டும் என்றால் ஒரு சிறிய கடை தேவைப்படும். அதன் பின் அதற்கு முதலீடாக 5,000 தேவைப்படும்.
- இது போதுமா என்று கேட்டால் முதல் தொடக்கதிற்கு போதும் இதனை தவிர கடை வாடகை 3000 ரூபாய் வைத்தால் மொத்தமாக 8,000 ரூபாய் போதும் அந்த பணத்தையும் அன்றே எடுத்துவிடலாம்.
- டீ கடை என்றால் கடைகளில் நிறைய ஸ்நாக்ஸ் விற்கப்படும். நீங்கள் முதல் முதலாக கடை திறப்பதனால் உங்களின் கடைகளுக்கு எவ்வளவு கூட்டம் வருகிறது என்பதை பார்த்துவிட்டு அதன் பின் பஜ்ஜி போண்டாம், சம்சா, வடை போட்டு விற்கலாம்.
- கூட்டம் இருக்கின்ற இடம் என்றால் உங்களுக்கு சராசரியாக லாபம் கிடைப்பதை விட அதிகம் லாபம் கிடைக்கும். அதனால் அங்கு கடைகளை வைக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்.
- டீ கடையில் என்ன லாபம் என்றால் நம் மக்கள் அனைவரும் சோகமாக இருந்தாலும் சரி மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி அதனை பகிர்ந்துகொள்வது டீ கடையில் தான். இன்னும் சொல்ல போனால் கல்லூரி மாணவர்கள் வரை டீ கடையில் தான் அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்துகொள்வார்கள்.
டீ கடையை எங்கு வைக்கலாம்:
- ரயில்வே கேட்
- பாஸ் ஸ்டாப்
- கல்லூரி பக்கத்தில்
- கோவில்கள்
- பார்க்
- அதிக மக்கள் புழங்கும் இடங்கள்.
டீ கடையில் என்ன விற்கலாம்:
- டீ
- இஞ்சி டீ
- ஏலக்காய் டீ
- மசாலா டீ
- கிரீன் டீ
- ஹெர்பல் டீ
- மூலிகை டீ
- லெமன் டீ
- காபி
- வடை
- சமோசா
- போண்டா
- பஜ்ஜி
- டீ கடை என்றால் மற்றவர்கள் கடையில் இருப்பதை விட உங்களுடைய கடையில் ஆரோக்கியத்திலும் சுவையிலும் தனித்து விளங்க வேண்டும். அப்போது தான் உங்கள் கடைக்கு என்று வாடிக்கையாளர்கள் வந்தடைவார்கள்.
- அதேபோல் மாலை நேரங்களில் பயிறு வகைகள், சுண்டல், புட்டு போன்ற ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து விற்கலாம்.
- அதுபோல் சிலர் காலை நேரங்களில் எண்ணெய் சாப்பிடமாட்டார்கள். ஆகையால் பிஸ்கட் வகைகள் விற்றால் அதனையும் வாங்குவார்கள் ஆகவே முதலில் டீ கடையை வைத்து அதன் பின் இந்த ஐடியாக்களை செய்து உங்களின் தொழிலை பெரிதாக்கிக்கொள்ளுங்கள். இப்போது டீ கடை வைத்தால் சுலபமாக ஒரு லாபம் கிடைக்குமா ஒரு கணக்கை போட்டு பார்ப்போம் வாங்க..!
- ஒரு டீ – 7 ரூபாய்
- வடை – 6 ரூபாய்.
- என்றால் ஒரு நாளுக்கு 100 டீ விற்றால் 700 கிடைக்கும். அதுபோல் 100 வடை 6 ரூபாய் என்றால் 600 ரூபாய் ஆகும். இதேபோல் மற்ற சினாக்ஸ் விற்றால் அதன் லாபத்தை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |
Advertisement