பெண்கள் தினமும் 1 மணி நேரம் செலவிட்டால் 1,000 ரூபாய் சம்பாதிக்கலாம் சூப்பர் தொழில்

Advertisement

பெண்கள் வீட்டில் இருந்து கொண்டே சம்பாதிக்கும் தொழில் 

அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் வணக்கம். உங்களுக்கு பயனுள்ள வகையில் தினமும் தொழில் பற்றிய யோசனைகளை சொல்லி வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகளையோடு இதை கொஞ்சம் சேர்த்து செய்தால் தினமும் சம்பாதிக்கலாம். அது என்ன என்று யோசிக்கிறீர்களா.! உங்கள் வீட்டில் இட்லி உணவு சாப்பிடுவீர்கள். டீ யும் குடிப்பீர்கள். இதை கொஞ்சம் கூட சேர்த்தால் தினமும் வருமானத்தை ஈட்டலாம். அது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

இந்த தொழிலையும் செய்து பாருங்கள் ⇒ பெண்கள் வீட்டில் இருந்து வெறும் 4 மணி நேரத்தில் 4,000/- ரூபாய் சப்பாத்திக்கலாம்.. அருமையான சுயதொழில்..

இட்லி வியாபாரம் செய்வது எப்படி.?

இட்லி மாவு வீட்டிற்க்கு அரைப்பதை விட கொஞ்சம் அதிகமாக அரைத்து கொள்ளுங்கள். நீங்கள் இட்லி வியாபாரம் செய்கிறேன் என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தெரிய படுத்துங்கள். அப்படி தெரிய படுத்தும் போது வேலைக்கு செல்பவர்கள் வந்து வாங்குவார்கள்.

அடுத்ததாக உங்கள் ஊரில் அல்லது பக்கத்தில் இருக்கும் ஊர்களில் வயல்கள் இருக்கும். அதில் கண்டிப்பா தினமும் குறைந்தபட்சம் 10 பேர் வேலைக்கு வருவார்கள். வேலைக்கு வருபவர்கள் காலையில் சாப்பிடாமல் தான் வருவார்கள். அவர்களுக்கு வயலின் முதலாளி தான் உணவு வாங்கி கொடுப்பார்கள்.

அந்த முதலாளியிடம் சொல்லி விட வேண்டும். இந்த மாதிரி இட்லி வியாபாரம் செய்கிறேன். உங்கள் தேவைப்படும் போது சொல்லுங்கள் என்று கூறி விட வேண்டும். அவர்கள் கண்டிப்பாக உங்களிடம் தான் வாங்குவார்கள்.

உதாரணமாக ஒரு இட்லி 6 ரூபாய் என்றால் ஒரு ஆளுக்கு 6 இட்லி கொடுத்தீர்கள் என்றால் 36 ரூபாய் கிடைக்கும். அதுவே 20 ஆளுக்கு கொடுத்துதீர்கள் என்றால்  தினமும் 720 ரூபாய் வருமானம் ஈட்டலாம். இட்லி கூட ஒரு சட்னி, சாம்பார் அல்லது இரண்டு சட்னி தரலாம் அது உங்களது விருப்பம்.

டீ, வடை:

இட்லி வியாபாரத்துடன் டீ, வடை வியாபாரத்தையும் செய்யலாம். வயலில் வேலை செய்பவர்களுக்கு காலை 11 மணிக்கு டீ, வடை மாலை டீ மட்டும் கொடுத்தால் போதுமானது.

உதாரணமாக 1 டீ 8 ரூபாய் என்றால் 30 டீ கொடுத்தீர்கள் என்றால் 240 ரூபாய் தினமும் வருமானம் ஈட்டலாம். 1 வடை 6 ரூபாய்  என்றால் 30 வடை கொடுத்தீர்கள் என்றால் 180 ரூபாய் தினமும் வருமானத்தை ஈட்டலாம்.

மேல் கூறப்பட்டுள்ள தொழிலை செய்தால் உதாரணமாக ஒரு நாளைக்கு 1,160 ரூபாய் தினமும் வருமானத்தை ஈட்டலாம்.

மேல் கூறப்பட்டுள்ள தொழில் நீங்கள் சென்று விற்பனை செய்ய தேவையில்லை உங்களை தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். அதனால் இந்த தொழிலை செய்து உங்களுக்கு என்று வருமானத்தை ஈட்டிக்கொள்ளுங்கள்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement