இந்த தொழிலை மட்டும் செஞ்சு பாருங்க இப்போ இல்லை எப்போதுமே Demand இருந்து கொண்டே இருக்கும்…!

Advertisement

யாரும் செய்யாத தொழில்

நாம் எப்போதும் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் போது அது போட்டி இல்லாத அதே சமயம் அதிக லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்கா வேண்டும் என்று நினைப்போம். அதிலும் நாம் தொடங்கும் தொழில் வேறு யாரும் தொடங்காத தொழிலாக இருந்தால் நாம் நினைத்ததற்கு மாறாக அதிக வருமானம் பெறலாம் என்று ஆசை தொழில் தொடங்க வேண்டும் என்பவருடைய மனதில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. நீங்கள் நினைத்த அனைத்தும் உங்களுக்கு இந்த ஒரு பதிவின் மூலம் கிடைத்து விடும். அதனால் இன்றைய பதிவில் சொல்லப்பட்டுள்ள தொழில் என்ன என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொண்டு நீங்களும் முதலாளி ஆகலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Wooden Spoon Business in Tamil:

யாரும் செய்யாத போட்டியே இல்லாத Wooden Spoon Business– ஐ தொடங்கினால் போதும் நீங்கள் நல்ல லாபம் பெறலாம்.

இந்த தொழிலின் Demand என்பது அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஹோட்டல், ஐஸ்கிரீம் கடை, Restaurant மற்றும் Stationery Shop கடை என  அனைத்து இடங்களிலும் இதனுடைய டிமெண்ட் அதிகமாக இருக்கிறது. ஆகாயல் இந்த Wooden Spoon Business இன்றே தொடங்கினால் போதும் லாபம் நீங்கள் நினைத்த அளவிற்கு கிடைக்கும்.

முதலீடு மற்றும் மூலப்பொருள்:

  1. மரக்கட்டைகள்
  2. Wood Cutting Machine
  3. Peeling Machine
  4. Stick Ice Making Machine

மேலே சொல்லப்பட்டுள்ள மிஷின்கள் அதன் மாடலை பொறுத்து விலை நிலவரம் வேறுபாடும். இந்த தொழிலை தொடங்குவதற்கு மொத்தமாக மிஷின், மரக்கட்டை மற்றும் கரண்ட் பில் என அனைத்தையும் சேர்த்து தோராயமாக 5 லட்சம் முதலீடு தேவைப்படும்.

தேவைப்படும் இடம்:

இந்த தொழிலை தொடங்குவதற்கு மின்சார வசதியுடன் கூடிய ஒரு பெரிய அளவிலான இடம் தேவை.

தயாரிக்கும் முறை:

Stick Ice Making Machine

 

முதலில் இந்த தொழிலை தொடந்துவதற்கு தேவையான மரக்கட்டைகளை வாங்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த மரக்கட்டைகளை Wood Cutting Machine– னில் இரண்டு அல்லது மூன்றாக குறிப்பிட்ட அளவில் Cut செய்து கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் Cut செய்த மரக்கட்டையின் மேல் இருக்கும் தோலினை கைகளால் உரித்து கொள்ளுங்கள். 

இப்போது நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள மரக்கட்டைகளை Peeling Machine– ல் பொறுத்தி கொண்டு மிஷினை On செய்தால் போதும் Peeling Machine மரக்கட்டையின் மேல் இருக்கும் தோலினை பட்டை போல் நீளம் நீளமாக உரித்து கொடுக்கும். 

அதன் பிறகு தோல் உரித்துள்ள பட்டயை எடுத்து ஒன்றாக இரண்டு அல்லது மூன்று பகுதியாக அடுக்கி கொள்ளுங்கள். இப்போது அடுக்கி வைத்துள்ள பட்டயை Stick Ice Making Machine- னுள் வைத்து மிஷினை On செய்தால் போதும் உங்களுக்கு Wooden Spoon தயாராகி வெளியே வந்து விடும்.

ஒரு நாளைக்கு இந்த மிஷினை வைத்து நீங்கள் தோராயமாக 5,000 முதல் 10,000 வரையிலான ஸ்பூனை தயார் செய்யலாம்.

உங்கள் விற்பனைக்கு ஏற்றவாறு இதனை பேக் செய்து கொள்ளுங்கள்.

விற்பனை செய்யும் முறை:

high profit business ideas in tamil

ஒரு நாளைக்கு தோராயமாக நீங்கள் இந்த Wooden Spoon தயாரிப்பதற்கான செலவுகள் போக 3500 ரூபாய் வருமானம் பெற முடியும். அப்படி என்றால் ஒரு வாரத்திற்கு நீங்கள் தோராயமாக 24,500 ரூபாய் வருமானம் பெறலாம்.

                    இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த 5 தொழில்களில் ஒன்றை தொடங்கி பாருங்க லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil

 

Advertisement