சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!

panchagavya

பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை..!

அதிகளவு இரசாயன பொருட்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதிக்கப்படுகிறது. எனவே மண்ணின் வளத்தை பாதுகாக்க தற்போது விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்கின்றனர். இயற்கை விவசாயத்தில் முக்கிய வளர்ச்சி ஊக்கியா பஞ்சகாவ்யா (panchagavya) விளங்குகிறது. குறிப்பாக பசுமாட்டின் 5 பொருட்களை வைத்து மிக குறைந்த செலவில் எளிதில் தயாரிக்க கூடிய ஒரு இயற்கை உரமாக விளங்குகிறது. அனைத்து பயிர்களுக்கும் இந்த பஞ்சகாவ்யாவை தெளிக்கலாம். குறைந்த செலவில் நம் வீட்டில் வளர்க்கும் பசுமாட்டின் ஐந்து பொருட்களை பயன்படுத்தி பயிர்களின் வளர்ச்சி ஊக்கியாக பயன்படுத்தினால் அதிக மகசூல் பெற இயலும்.

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

 

சரி வாருங்கள் இந்த பகுதியில் பஞ்சகாவ்யா (panchagavya) எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  1. நாட்டுப்பசு சாணம் (அன்று ஈன்றது) – 5 கிலோ
  2. பசு தயிர் – 2 லிட்டர்
  3. பால் – 2 லிட்டர்
  4. வாழைப்பழம் – 12 (நன்றாக பழுத்தது)
  5. வெல்லம் – 1 கிலோ
  6. கோமியம் – 3 லிட்டர்
  7. பசும் நெய் – 1/2 கிலோ
  8. இளநீர் – 3 லிட்டர்

பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 1

ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் டப்பாவை எடுத்து கொள்ளவும். அவற்றில் அன்று ஈன்ற பசுசாணம் ஐந்து கிலோ எடுத்து சேர்த்து, அதனுடன் 1/2 லிட்டர் பசும் நெய் சேர்த்து கைகளால் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 2

பிறகு ஒரு வெள்ளை துணியால் பிசைந்து வைத்துள்ள பசு சாணத்தை ஒரு வாரம் வரை மூடி வைக்க வேண்டும். (அதே போல் தினமும் இரண்டு வேளை கைகளால் பிசைந்து விட வேண்டும். எதற்காக தினமும் இரண்டு வேளை பிசைய வேண்டும் என்றால் சாணத்தில் இருக்கும் மீத்தேன் வாயு வெளியேறுவதற்காக தினமும் இரண்டு முறை பிசைய வேண்டும்.)

ஒரு வாரத்திற்கு பிறகு பிசைந்து வைத்துள்ள சாண கலவையில், மேல் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களையும் சேர்க்க வேண்டும்.

பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 3

சரி வாருங்கள் கலவையில் பொருட்களை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

பிசைந்து வைத்திருக்கும் மாட்டு சாணம் கலவையில் முதலில் 3 லிட்டர் இளநீரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பின்பு அதனுடன் 3 லிட்டர் கோமியத்தை சேர்க்க வேண்டும்.

பிறகு 2 லிட்டர் புளித்த தயிரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

இதை தொடர்ந்து 2 லிட்டர் பசும் பாலை சேர்க்க வேண்டும். (பால் நன்றாக சுடவைத்து கொண்டு பிறகு இந்த கலவையில் சேர்க்க வேண்டும்.)

இயற்கை பூச்சி விரட்டி கரைசல் நன்மை..!

பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 4

பின்பு இதனுடன் 12 நன்றாக கனிந்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். வாழைப்பழத்தை எதற்காக பயன்படுத்துகிறோம் என்றால் வாழைப்பழத்தில் அதிகளவு நைட்ரஜன் உள்ளதால் பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது.

பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 5

இறுதியாக இவற்றில் ஒரு கிலோ வெல்லத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். (விலை உயர்ந்த வெல்லத்தை வாங்கி பயன்படுத்த வேண்டாம் அழுக்கு வெல்லம் என்று கடைகளில் விற்கப்படும் அவற்றை வாங்கி பயன்படுத்தினாலே போதும்.) வெல்லம் எதற்காக பயன்படுத்துகிறோம் என்றால் நுண்ணுயிரிகளை அதிகரிப்பதற்காக வெல்லத்தை பயன்படுத்துகிறோம்.

பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 6

அவ்வளவுதான் பஞ்சகாவ்யா (panchagavya) தயார். இந்த கலவையை 15 நாட்கள் வரை தினமும் இரண்டு வேளை இடது புறமாக 50 முறை கலந்து விட வேண்டும். பின்பு வலது புறமாக 50 முறை கலந்து விடவேண்டும்.

பஞ்சகாவ்யா தயாரிக்கும் முறை ஸ்டேப்: 7

15 நாட்கள் கழித்து இந்த கலவையை வடிகட்டினால் 20 லிட்டர் பஞ்சகாவ்யா பெற முடியும். ஏக்கருக்கு 30 மில்லி முதல் 35 மில்லி வரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து அனைத்து வகை பயிர்களுக்கும் தெளிக்கலாம்.

பயன்கள்:

பஞ்சகாவ்யா பயன்கள்: 1

75% பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.

பயிர்கள் ஒரே சீராக வளர்வதற்கு உதவுகிறது.

பஞ்சகாவ்யா பயன்கள்: 2

சுற்றுப்புற சூழலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.

வளர்ச்சி பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பஞ்சகாவ்யா பயன்கள்: 3

பஞ்சகாவ்யாவில் (panchagavya) 13 வகை நுண்ணூட்டச் சத்துக்கள் அடங்கியுள்ளது.

கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. சைடோகைனின் என்னும் வளர்ச்சி ஊக்கி, அமினோ அமிலம் மற்றும் அனைத்து வகை தாதுக்கள் மற்றும் மினரல்ஸ் உள்ளது.

பஞ்சகாவ்யா பயன்கள்: 4

மண்ணின் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகிறது.

இவற்றில் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளான பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் உள்ளது.

மீன் அமினோ அமிலம் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை..

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் – பயிர் சாகுபடி, உரங்கள், பூச்சி கொல்லி முழு விளக்கம்.