நவீன விவசாய கருவிகள் பெயர்கள்..! Agriculture tools names in tamil..!

agriculture tools names in tamil

நவீன விவசாய கருவிகள் பெயர்கள்..! Agriculture tools names in tamil..!

வேளாண் கருவிகள் / Indian agricultural tools pictures with names:- வேளாண்மைத் தொழிலில் வேலை ஆட்கள் பற்றாக்குறை இப்பொழுது பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதை நிவர்த்தி செய்ய வேளாண்மையில் புதிய தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அறிமுகப்படுத்தி அவற்றின் மூலம் பண்ணை பணிகளை எளிதாக்கவும், குறித்த காலத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் நிகர லாபத்தினை அதிகரிக்கவும், இப்பொழுது பலவகையான நவீன விவசாய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த நவீன விவசாய கருவிகள் பெயர்கள் (Agriculture tools names) மற்றும் அதன் சிறப்பு அம்சங்களை இங்கு படித்தறிவோம் வாங்க.

சிறு குறு விவசாய கருவிகள் மானியம்

Indian agricultural tools pictures with names..!

நெல் நாற்று நடும் கருவி / rice transplanter machine:

agriculture tools names in tamil
agriculture tools names in tamil

வேலையாட்களின் பற்றாக்குறையை சமாளிக்க நெல் நடுவதற்கு கருவிகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இக்கருவியானது நாற்றுப் பெட்டிகள், கைப்பிடி, மிதப்புச் சட்டங்கள் மற்றும் நாற்று எடுக்கும் கொக்கிகள் முதலான பக்கங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கைப்பிடியை கீழ் நோக்கி அழுத்தும்போது கொக்கிகள் நாற்றுப் பெட்டிகளிலிருந்து நாற்றுகளை பற்றி எடுத்து வயலில் நடுகின்றன ஒவ்வொரு முறை கைப்பிடியை அழுத்தும்போது நாற்றுப்பெட்டி பக்கவாட்டில் நகரும்படியாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு செய்தால் கொக்கிகள் ஒரே சீராக 3 முதல் 4 நாற்றுகளை எடுத்து நடுகின்றன.

கருவியை உபயோகிப்பதால் ஆட்கள் செலவு குறைவாக இருக்கும். ஒரே சமயத்தில் 6 வரிசைகளில் நாற்று நட முடியும்.

விவசாய கருவிகள் பெயர்கள் – நெல் அறுவடை இயந்திரம் 

agriculture tools names in tamil
agriculture tools names in tamil

தற்பொழுது ஏற்பட்டுள்ள கூலியாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இந்த இயந்திரம் அமைந்துள்ளது. அதிலும் கூட்டு அறுவடை இயந்திரத்தின் மூலம் பயிர் அறுவடை முதல் நெல் பிரித்தெடுத்தல் வரை அனைத்து செயல்முறைகளையும் செய்து விடலாம். இதற்கு குறைவான ஆட்களே போதுமானது நேரமும் சேமிக்கப்படுகிறது.

Agriculture tools names in tamil – நெற்பயிரில் களையெடுக்கும் கருவி:-

agriculture tools names in tamil
agriculture tools names in tamil

வரிசையில் நடவு செய்த நெற்பயிரில் களை எடுக்க இந்த கருவி பயன்படுகிறது. இக்கருவியானது எளிதில் சுழலும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ளது, ஒன்று அல்லது இரண்டு உருளைப் பகுதிகளையும், சேற்றில் எளிதாகத் தள்ளிச் செல்வதற்கேற்ற மிதப்பான் போன்ற அமைப்பையும் கொண்டுள்ளது.

மேலும் இயக்கும் நபர் நடந்தவாறே தள்ளிச் செல்ல நீண்ட கைப்பிடியும் இணைக்கப்பட்டுள்ளது.

களையெடுக்கும் கத்தி மற்றும் எளிதில் தள்ளிச் செல்வதற்கேற்ற உருளையும் கைப்பிடியும் அடிப்பாகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

மண்ணின் தன்மைக்கேற்ப நட்சத்திர வடிவ அல்லது முள் வடிவ உருளைகளை பொருத்தி பயன்படுத்த வேண்டும்.

கைப்பிடியை முன்னும் பின்னும் இயக்கம் போது கத்தி மண்ணிற்குள் சென்று களைச்செடிகளை வெட்டுகிறது. இக்கருவியை பயன்படுத்த மண்ணின் ஈரப்பதம் 10 சதவீதம் இருக்க வேண்டும்

ஒரு உருளையைக் கொண்டு கருவியால் ஒரு வரிசையிலும் அதேபோல இரண்டு உருளைப் பகுதியைக் கொண்ட கருவியில் ஒரே சமயத்தில் இரண்டு வரிசையிலும் எளிதில் களையெடுக்க முடியும்.

மேலும் நெற்பயிர்களில் களையெடுக்கும் நவீன விவசாய கருவிகள் மோட்டர்களில் இயங்கக்கூடியவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது கீழ் படத்தில் கட்டப்பட்டுள்ள நவீன விவசாய கருவிகள் நெற்பயிர்களில் களையெடுக்க பயன்படுகிறது.

இருப்பினும் இது மோட்டார் மூலம் இயங்கக்கூடியவை, இருப்பினும் இந்த விவசாய கருவி மோட்டாரில் இயங்கக்கூடியவை என்பதால் ஒரு ஏக்கரில் இந்த கருவி மூலம் களையெடுக்க குறைந்தபட்சம் 2 லிட்டர் பெட்ரோல் தேவைப்படும்.

agriculture tools names in tamil
agriculture tools names in tamil

Agriculture tools names in tamil – சோலார் பம்பு செட்:

agriculture tools names in tamil
agriculture tools names in tamil

விவசாயத்தில் மின்வெட்டு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. இந்த சோலார் பம்பு செட் இவற்றை நிறுவ அரசு மானியம் வழங்குவதால் சோலார்  பம்பு செட் அமைப்பதில் செலவு அதிகம் ஏற்படாது.

இதில் சூரிய ஒளியை கொண்டு உற்பத்தியாகும் மின்சாரம் அப்படியே பயன்படுத்தபடுகிறது. எனவே மின்வெட்டு காலத்திலும் தங்கு தடையின்றி பயிர்களுக்கு நீர் பாசனம் செய்ய முடியும்.

மனித சக்தியால் இயங்கும் மருந்து தெளிப்பான் / Agriculture tools names in tamil / Agrimate Machine:-

agriculture tools names in tamil
agriculture tools names in tamil

வேளாண் கருவிகள் / Indian agricultural tools pictures with names:- மனித சக்தியால் இயங்கும் மருந்து தெளிப்பான் (Hand Operated Sprayers/ Dusters). இது ஒரே ஒரு நபரால் இயங்கப்படும் கருவியாகும். இது ஈரமான பூச்சிக்கொல்லி மற்றும் பூசணக் கருவி ஆகும். இந்த கைத்தெளிப்பானில் ரோமியல் கலந்த பித்தளை தொட்டி உள்ளது. இதன் கொள்ளளவு 0.5 – 3 லிட்டர் ஆகும்.

தெளிப்பானில் சிறிய வெளியேறும் குழாய் உள்ளது. அதில் கூம்பு போன்ற டெலிமுனையானது பொருத்தப்பட்டுள்ளது.

தெளிப்பதற்கு தொட்டியானது நான்கில் மூன்று பங்கு நிறைந்திருக்க வேண்டும். உள்ளே உள்ள திவரமானது தெளிப்பான் வழியாக வெளியேறும்.

கோடையில் நல்ல லாபம் தரும் எள் சாகுபடி..!

தென்னை மரம் ஏற நவீன கருவி / Agriculture tools names in tamil / COCONUT TREE CLIMBER:

agriculture tools names in tamil
agriculture tools names in tamil

வேளாண் கருவிகள் / Indian agricultural tools pictures with names:- தென்னை மரம் ஏறுவதில் உள்ள சிரமங்களை குறைக்க இக்கருவி பெரிதும் (agriculture tools names in tamil) பயன்படுகிறது.

மனிதர்கள் மரத்தில் ஏறி, உடலை வருத்திக் கொண்டு தேங்காய் பறிப்பதற்கு மாற்றாய் வந்துள்ளது தேங்காய் பறிக்கும் கருவி. இந்த கருவியின் பெயர் Multi tree climber என்பதாகும். தென்னை மரத்தில் ஏறுவதற்கு மட்டுமின்றி கிளை இல்லாத அனைத்து வகையான மரங்களிலும் ஏறுவதற்கு இந்த கருவி (agriculture tools names in tamil) உதவுகிறது.

கருவியின் சிறப்பு:

இக்கருவியின் மூலம் பெண்கள், சிறியவர்கள் என்று அனைவரும் மரத்தில் ஏற முடியும்.

மரத்தில் இரும்பு பாகங்கள் படும் பகுதியில் மரங்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க ரப்பர் உருளைகள் பொருத்தப்பட்டுள்ளது.

குறைந்த எடையில் இருந்தால் இதனை எடுத்து செல்வது எளிது.

இக்கருவியானது அதிக பட்சமாக 70 கிலோ எடை வரை தாங்கவல்லது.

மரத்தின் சுற்றளவிற்கேற்ப கருவியில் இருந்தவாறே சரி செய்யும் வசதி, மரத்தின் உச்சியில் நிறுத்திவிட்டு மட்டையின் மீது ஏறிச் செல்லவும், சுற்றி வந்து காய் பறிக்கவும், கிளைகளை வெட்டவும் முடியும்.

பயன்படுத்தும் முறை:

மரம் ஏறுபவர் பாதுகாப்பு கச்சையை அதாவது (BELT) உடலில் அணிந்துகொள்ள வேண்டும். முதலில் கீழ் பகுதி அதன் பின் மேல் பகுதியை மரத்தில் சரியாக பொறுத்த வேண்டும். இணைப்புக் கச்சையால் இணைக்க வேண்டும்.

கால் வைக்கும் பகுதில் ஏறி நின்று, இரு கைகளாலும் மேல்பகுதியை மேல்  நோக்கியவாறு எடுத்து மரத்துடன் சற்று சாய்ந்த நிலையில் வைத்து அதன் பின் அதில் அமர வேண்டும். மேல் மற்றும் கீழ்ப்பகுதியின் இணைப்பு கச்சையை மரம் ஏறுபவரின் கால்களின் உயரத்திற்கேற்ப சரி செய்து கொள்ளலாம்.

கருவியில் அமர்ந்த நிலையில் கீழ்ப்பகுதியை மேல் நோக்கியவாறு கால்களின் உதவியோடு சரிசமமாக எடுத்துவைத்த நிலையில் சற்று அழுத்தியவாறு எழுந்து நிற்க வேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றி செய்யும்போது மரத்தின் மேல் புறம் செல்லப்படுவீர்கள். இறங்க வேண்டுமென்றால் கீழ்நோக்கியவாறு எடுத்து வைத்து வர வேண்டும்.

கீழ்ப்பகுதியில் நின்றவாறே மேல்பகுதியை சமமாக வைத்த நிலையில் நீட்ட, குறைக்க அல்லது நிறுத்திவைக்க அதற்குண்டான பாகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேல்பகுதியில் அமர்ந்தவாறே கீழ்ப்பகுதியை சமமாக வைத்த நிலையில் நீட்ட, குறைக்க அல்லது நிறுத்தி வைக்க அதற்குண்டான பக்கங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கோடை உழவு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க ..!

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>pasumai vivasayam in tamil