டிராகன் பழம் செடி வளர்ப்பது எப்படி? Dragon Fruit Cultivation in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இன்று நாம் விவசாயம் பகுதியில் டிராகன் ஃப்ரூட் சாகுபடி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம். இந்த டிராகன் பழம் நாம் அதிகம் அறிந்திடாத பழவகைகளில் ஒன்று ஆகும். இருப்பினும் பரவலாக இந்த டிராகன் பழம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழம் பார்ப்பதற்கு சப்பாத்திக்கள்ளி பழத்தை போலவே காட்ச்சியளிக்கும். இது கற்றாழை குடும்பத்தை சார்ந்த கொடிவகை கொடி போன்ற ஒட்டுயிர் தாவரம். இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும். ஆரம்பத்தில் இதனை சாகுபடி செய்யும் போது செலவுகள் கொஞ்சம் நிறைய இருக்கும். அதன் பிறகு செலவுகள் அதிக இருக்காது. சரி இந்த டிராகன் பழத்தை எப்படி சாகுபடி செய்யலாம் என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
டிராகன் ஃப்ரூட் கன்றுகள் எங்கு கிடைக்கு?
இந்த சாகுபடிக்கான கன்றுகள் பெற விரும்புபவர்கள் குஜராத்தில் வாங்கிக்கொள்ளலாம். குஜராத்தில் வாங்கினால் கள்ளிச்செடி போன்று வளரும், கொடியாகப் படரும்.
டிராகன் பழம் வகைகள்:
இந்த டிராகன் பழத்தில் மூன்று வகைகள் உள்ளது அவற்றை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
- சிவப்புத் தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம்.
- சிவப்புத் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.
- மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டில் உள்ள செடிகள் அனைத்தும் செழித்து வளர வாழைப்பழ கரைசல் தயாரிக்கும் முறை..!
பயிரிடும் முறை:
இடத்திற்கு ஏற்றது போல் கல்தூண்கள் அல்லது சிமென்ட் தூண்கள் மற்றும் அதன் உச்சியில் வட்ட வடிவ சிமென்ட் மூடி தேவை. 6×8 அடி இடைவெளியில் கல்தூண்கள் நடவேண்டும். ஒரு கல் தூணைச் சுற்றி நான்கு டிராகன் கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
வறட்சியை தாங்கி வளரக்கூடிய குணத்தை கொண்டது இந்த டிராகன் பழம். ஆக நீர்ப்பாசனம் முறை பொறுத்தவரை வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் கன்றுகளுக்கு நீர் பாசனம் செய்தால் போதும்.
அறுவடை காலம்:
டிராகன் கன்றுகளை நடவு செய்த நாளில் இருந்து இரண்டு வருங்களுக்கு பிறகு டிராகன் பழம் அறுவடைக்கு தயாராக இருக்கும்.
இயற்கை உரம்:
பூச்சிகள் மற்றும் நோய்கள் தாக்குதல்கள் இந்த டிராகன் சாகுபடியில் இருக்காது. அதனால் இயற்கை உரங்களான மண்புழு உரம், மக்கிய தொழு உரம், பஞ்சகாவியா பயன்படுத்திதான் சாகுபடி செய்கின்றன. இவை வருடத்திற்கு ஆறு மாதம் பலன் அளிக்கக்கூடியது.
விளைச்சல்:
ஒரு தூணுக்கு வருடத்திற்கு சராசரியாக 8 முதல் 10 கிலோ பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் 200 முதல் 750 கிராம் வரை இருக்கும். ஒவ்வொரு வருடமும் கவாத்து செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒரு விஷயம் ஆகும்.
இந்த சாகுபடியை நீங்கள் வெறும் 20 செண்டில் ஆரம்பித்தால் கூட 60,000/- வரை வருமானம் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாடித்தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளும் செழித்து வளர இயற்கையான முறையில் உரம் தயாரித்தல்..!
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | இயற்கை விவசாயம் |