ஒரே நாளில் செடிகளை செழிப்பாக வளர வைக்கக்கூடிய கரைசல் தயாரிக்கும் முறை..!

Advertisement

உரம் தயாரிக்கும் முறை

பொதுவாக நாம் ஒரு செயலை மேலோட்டமாக பார்க்கும் போது சாதாரணமாக தான் தெரியும். அதே அதனை நுண்ணிப்பாக உள்ளே சென்று பார்க்கும் போது தான் அதனுடைய கஷ்டம் என்னவென்று தெரியும். அந்த வகையில் விவசாயம் செய்வதும் அப்படி தான். விவசாயத்தை நாம் வெளித்தோற்றத்தில் பார்க்கும் போது அழகாக தான் இருக்கும். அதுவே அதனை ஆரம்பத்தில் இருந்து செய்தவர்களுக்கு தான் அதனுடைய கஷ்டம் தெரியும். அதுபோல சிலர் வீட்டில் செடி, கொடிகளை வாங்கி வளர்ப்பார்கள். ஆனால் அவற்றையும் பராமரிப்பது என்பது மிகவும் சாத்தியமற்ற ஒரு செயல். அதனால் தான் உங்களுக்கு பயனுள்ளவாறு செடிகளை செழிப்பாக வளர வைக்க கூடிய ஒரு கரைசலை தயாரிப்பது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

சரியான முறையில் பஞ்சகாவ்யா தயாரிப்பு..!

எருக்க இலை கரைசல்:

செடிகள் நன்கு வளர

இயற்கையான முறையில் எருக்கு கரைசல் தயாரித்து அதனை எப்படி செடிகளுக்கு உரமாக அளிப்பது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எருக்கில் போரான் நுண்ணூட்டச்சத்து அதிகளவு இருக்கிறது. அதனால் போரான் நுண்ணூட்டச்சத்து குறைவாக உள்ள செடிகளுக்கு எருக்கு கரைசலை அளிப்பதன் மூலம் செடி நன்றாக செழிப்பாக வளர்ந்து செடியில் நிறைய காய்கள் மற்றும் பூக்கள் வைக்கும்.(குறிப்பு: எருக்கினை நறுக்கும் போது அதனுடைய பால் கண்களில் படாதவாறு நறுக்க வேண்டும்)

தேவையான பொருட்கள்:

  • எருக்கு இலை- 3 கிலோ 
  • பிளாஸ்டிக் பாத்திரம்- 1 பெரிய அளவு
  • நாட்டுச்சர்க்கரை- 1/2 கிலோ 
வீட்டில் உள்ள செடிகள் அனைத்தும் செழித்து வளர வாழைப்பழ கரைசல் தயாரிக்கும் முறை..!

செய்முறை:

முதலில் எடுத்துவைத்துள்ள எருக்கு இலையினை நன்றாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். அதில் இருக்கும் பூவினையும் நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் நறுக்கி வைத்துள்ள எருக்கு இலை மற்றும் நாட்டுச்சக்கரை இரண்டையும் சேர்த்து அதில் நிறைய தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பின்பு அதன் மீது மண்ணினை போட்டு காற்று புகாத அளவிற்கு வைத்து மூடி வைத்து விடுங்கள்.

20 நாட்கள் கழித்த பிறகு அந்த பாத்திரத்தை திறந்தது பார்த்தால் எருக்கு செடிகள் அனைத்தும் நன்றாக கழிவுகளாக மாறி விடும். அவ்வளவு தான் எருக்கு கரைசல் தயார் ஆகிவிட்டது.

செடிகளுக்கு உரம் அளிக்கும் முறை:

இப்போது நீங்கள் தயார் செய்து வைத்துள்ள எருக்கினை ஒரு குச்சியால் கலந்து செடிகளுக்கு அளிப்பதன் மூலம் செடிகளுக்கு தேவையான போரான் நுண்ணூட்டச்சத்து கிடைத்து செடி நன்றாக செழிப்பாக வளர்ந்து செடி நிறைய பூக்கள் மற்றும் காய்கள் காய்க்க ஆரம்பமாகும்.

இயற்கை விவசாயத்தின் ஜீவ நாடியான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை !!!

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> விவசாயம் 
Advertisement