குளிர்காலத்தில் பூச்செடிகளை பராமரிப்பது எப்படி..?

Advertisement

How Protect Delicate Flowers Winter in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் குளிர்காலத்தில் நம் வீட்டில் இருக்கும் பூச்செடிகளை எப்படி பாதுகாப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். சிலர் வீட்டை சுற்றி அழகான பூச்செடிகள் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதுபோல சிலர் அந்த பூச்செடிகளை குளிர்காலத்தில் எப்படி பராமரிப்பது என்று தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். குளிர்காலத்தில் பூச்செடிகளை பாதுகாப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

மழைக்காலங்களில் செடிகளை பராமரிப்பது எப்படி..?

குளிர்காலத்தில் பூச்செடிகளை பாதுகாக்க சில டிப்ஸ்:

How Protect Delicate Flowers Winter in Tamil

பூச்செடிகளை மழை மற்றும் பனிக்காலத்தில் பாதுகாப்பது மிகவும் அவசியமான ஓன்று. நம் வீட்டில் இருக்கும் பூச்செடிகளை பராமரிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. அந்த வகையில் பூச்செடிகளை பாதுகாக்க சில டிப்ஸ் உங்களுக்காக..!

டிப்ஸ் -1 

குளிர்காலத்தில் பூச்செடிகளை வெளியில் வைப்பதை விட வீட்டின் உள்ளே வைத்து வளர்ப்பது நல்லது. இதனால் குளிர்காலத்தில் பூச்செடிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும்.

டிப்ஸ் -2       

பொதுவாக பூச்செடிகளை வளர்க்கும் போது அதை ஒரு தொட்டியில் வைத்து வளர்ப்பது நல்லது. ஏனென்றால், குளிர் மற்றும் வெயில் என்று காலம் மாறும் போது இந்த செடிகளை நாம் இடம் மாற்றி வைத்து கொள்ள முடியும்.

இதனால் குளிர்காலத்தில் செடிகளை வீட்டின் உள் பகுதியிலும், அதேபோல வெயில் காலத்தில் செடிகளை வெளியிலும் இடம் மாற்றி வைத்து கொள்ள முடியும். இதன் மூலம் பூச்செடிகளை குளிர்காலத்தில் பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.

மாடி தோட்ட செடிகளை பராமரிக்கும் முறை..!

டிப்ஸ் -3 

குளிர்காலம் வருவதை அறிந்து, 2 மாதங்களுக்கு முன்பே பூச்செடிகளுக்கு தேவையான அளவு உரம் போடுவது நல்லது. இதனால் பூச்செடிகள் குளிர்காலத்தில் செழிப்பாக இருக்கும்.

அதேபோல குளிர்காலத்தில் பூச்செடிகளின் இலைகள் மற்றும் தண்டுகளை வெட்டி விடுவது போன்ற செயல்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. இப்படி செய்வதால் குளிர்காலத்தில் பூச்செடிகள் பசுமையாக இருக்கும்.

டிப்ஸ் -4 

குளிர்காலத்தில் பூச்செடிகளை பாதுகாப்பதற்கு ஒரு அட்டை அல்லது கோணி பைகளை பயன்படுத்தலாம். பூச்செடிகளை அட்டை வைத்து மூடி வைப்பதால் குளிர்கால பனியில் இருந்தும், அதேபோல வறண்ட காற்றில் இருந்தும் செடிகளை பாதுகாக்க முடியும். அதேபோல வெயில் வந்ததும் பூச்செடிகளை எல்லாம் வெளியில் எடுத்து வைத்து கொள்ளலாம்.

குளிர்காலத்தில் இதுபோல பூச்செடிகளை பராமரித்து வந்தால் செடிகள் பசுமையாகவும் செழிப்பாகவும் இருக்கும். அதேபோல பூக்களும் பூக்கும்.

உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா?
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil
Advertisement