செம்பருத்தி பூ சாகுபடி செய்யும் முறை.!

Advertisement

Hibiscus Cultivation

செம்பருத்தி பூவின் சாகுபடி முறை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். செம்பருத்தி பூ, தென்கொரியா மற்றும் மலேசியா நாட்டின் தேசிய மலராக திகழ்கிறது. செம்பருத்திக்கு செவ்வரத்தை மற்றும் செம்பரத்தை என்ற வேறு பெயர்களும் உண்டு. மேலும், இதனை சீன ரோஜா என்றும் அழைப்பார்கள். செம்பருத்தி பூ குறிப்பாக மூலிகை மருந்து தயாரிக்க பயன்படுகிறது. எனவே, செம்பருத்தி செடி சாகுபடி முறையின் விவரங்களை பின்வருமாறு தொகுத்துள்ளோம்.

How To Hibiscus Cultivation in Tamil:

How To Hibiscus Cultivation in Tamil

செம்பருத்தி பூவின் ரகங்கள்:

  • கோ 1 (ஈரடுக்கு வகை)
  • கோ 2 (மஞ்சள் பூவில் சிவப்பு நிறப்புள்ளி)
  • கோ 3 (மஞ்சள், சிகப்பு நிற மலர்)

செம்பருத்தி நடவு காலம் மற்றும் மண் வகை:

செம்பருத்தி செடி நடுவதற்கு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஏற்ற காலம் ஆகும். செம்பருத்தி செடி செம்மண் மற்றும் கரிசல் மண்ணில் வளரும் தன்மை கொண்டது.

அத்திப்பழம் சாகுபடி முறை & பயன்கள்..!

செம்பருத்தி நடவு செய்யும் முறை:

 செம்பருத்தி சாகுபடி

நீங்கள் தேர்ந்தெடுத்த நிலப்பகுதியில் 1 ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தை போட்டு நிலத்தை நன்றாக உழுது கொள்ளுங்கள்.

பிறகு, செடிக்கு செடிக்கு 6 அடி மற்றும் வரிசைக்கு வரிசை 6 அடி இடைவெளி விட்டு அரையடி அளவில் குழிபறித்து கொள்ளவும். இந்த ஒவ்வொரு குழியிலும் ஒரு கிலோ சாணம் மற்றும் ஒரு மட்கிய தென்னைநார் போட்டு தண்ணீர் ஊற்றி கொள்ளவும். 

பிறகு, 10 நாட்கள் கழித்து, செம்பருத்தி செடிகளை தயார் செய்து வைத்துள்ள குழிகளில் பதித்து மண் அணைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். 1 ஏக்கரில் பயிரிட மொத்தம் 1200 செம்பருத்தி செடிகள் தேவைப்படும்.

செம்பருத்தி செடிக்கு, நடவு செய்த அன்று தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுத்து, மூன்றாம் நாள் தான் தண்ணீர் ஊற்ற வேண்டும். 

செடிகள் நன்றாக வளர்ந்த பிறகு, ஒரு வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அறுவடை அளவு:

1 ஏக்கர் நிலத்தில் இருந்து தினமும் 8 கிலோ பூக்கள் வரை அறுவடை செய்யலாம். 

உரமிடும் அளவு:

செடிகளுக்கு உரங்களை அளவுடன் இடுதல் வேண்டும். அதிக அளவில் உரங்களை இட்டால் இலைகள் தடித்து மகசூல் குறையும்.

நடவு செய்து, ஒரு மாதம் கழித்து 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

பூக்கள் பூக்க தொடங்கிய பிறகு, 200 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் மீன் அமினோ அமிலம் கலந்து பாசன நீருடன் கலந்து செடிகளுக்கு தர வேண்டும்.

மூன்று மாதங்களுக்கு பிறகு, யூரியா இட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

எளிய முறையில் சாமை பயிரிடுதல் பற்றி தெரியுமா..?

களை எடுக்கும் காலம்:

செம்பருத்தி செடிக்கு, முதல் எட்டு மாதங்கள் வரை களை எடுக்க வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை என தொடர்ந்து எட்டு மாதங்கள் வரை களை எடுக்க வேண்டும். மேலும், ஆண்டுக்கு ஒருமுறை பூக்களின் அறுவடை முடிந்த பிறகு, செடிகளுக்கு கவாத்து (பக்க செடிகளை வெட்டி ஒழுங்குப்படுத்தும் முறை) செய்ய வேண்டும்.

நோய் தாக்குதல்:

பொதுவாக, செம்பருத்தி செடியை நோய்கள் தாக்குவதில்லை. இருப்பினும் சில சமயங்களில் மாவு பூச்சி தாக்குதல் ஏற்படலாம். எனவே, அந்நேரங்களில் பச்சை மிளகாய் மற்றும் பூண்டு கரைசலை செம்பருத்தி செடிகளின் மேல் தெளித்து விட வேண்டும்.

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement