செடிகள் செழிப்பாக வளர
நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நம் அனைவருக்குமே வீட்டை சுற்றி அழகழகான செடிகள் வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். நம் வீட்டை சுற்றி வண்ண வண்ண பூச்செடிகள், காய்கறி செடிகள் போன்றவை இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். அதற்காக நாம் நர்சரியில் இருந்து காசு கொடுத்து செடிகளை வாங்கி வந்து வளர்ப்போம்.
ஆனால் செடிகள் ஒரு சில வீடுகளில் மட்டும் தான் செழிப்பாக வளரும். ஒரு சில வீடுகளில் செடிகள் வளராமலே போய்விடுகிறது. எவ்வளவு தான் பராமரித்தாலும் செடிகள் வளரவில்லை என்று சொல்லி புலம்புபவரா நீங்கள்..! அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். அதனால் இந்த பதிவை முழுமையாக செடிகளை செழிப்பாக வளரவைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்..!
வாடிய ரோஜா செடியில் கூட பூக்கள் பூக்க வைக்கலாம்..! அதுக்கு இப்படி செய்யுங்க..! |
Liquid Fertilizer For Growing Plants in Tamil:
நாம் அனைவருமே செடிகள் செழிப்பபாகவும் பசுமையாகவும் வளர வேண்டும் என்று நினைப்போம். அதற்காக நாம் எத்தனையோ வகையான உரங்களை வாங்கி வந்து செடிகளுக்கு கொடுப்போம். ஆனால் அப்படி செய்தும் செடிகள் வளரவில்லை என்றால் நாம் என்ன செய்வது.
அப்படி செடிகள் பசுமையாகவும் செழிப்பாகவும் வளர இந்த ஒரு பொருளை மட்டும் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றுங்கள். அது என்ன பொருள் என்று இங்கு பார்ப்போம்.
வளராத செடிகளை கூட செழிப்பாக வளரவைக்க முருங்கை கீரை மிகவும் உதவுகிறது. அதனால் முருங்கை கீரையை செடிகளுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளவும்.
தக்காளி செடியில் கொத்து கொத்தாக காய்கள் காய்க்க இதை மட்டும் செய்யுங்கள் போதும் |
பின் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நாம் எந்த அளவிற்கு கீரை எடுத்து கொண்டோமோ அதை விட 5 மடங்கு அளவிற்கு அதில் தண்ணீர் ஊற்றி கொள்ள வேண்டும்.
பின் இந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக வளரும். பூ செடிகளில் பூக்கள் பூத்து குலுங்கும். செடிகளில் காய்கள் அதிகமாக காய்க்கும். ஒரு முறை இந்த நீரை உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளுக்கு கொடுத்து பாருங்கள். செடிகளின் வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => செடிகளை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க இதை மட்டும் செய்யுங்கள்
இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | இயற்கை விவசாயம் |