பனிக்காலத்தில் செடியில் இருக்கும் இலைகள் மற்றும் பூக்கள் உதிராமல் இருக்க இப்படி செய்யுங்கள்..!

Advertisement

Chedi Valarpu in Tamil

அன்பு நேயர்களுக்கு வணக்கம்..! பெரும்பாலும் பனிக்காலங்களில் நம் வீட்டில் இருக்கும் செடியில் இலைகள் மற்றும் பூக்கள் அதிகளவில் உதிர்வதை நாம் பார்த்திருப்போம். செடியில் பூக்கள் பூக்கும் நேரத்தில் பூக்கள் திடீரென்று கொட்டிவிடும். அதுபோல இலைகளும் மஞ்சள் நிறமாக மாறி அதிகளவில் கொட்டுவதை நாம் கவனித்திருப்போம். அதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் பலரும் பல முறைகளை செய்வார்கள். அந்த வகையில் செடிகளில் பூக்கள் மற்றும் இலைகள் உதிராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின்  மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

செம்பருத்தி செடி வேகமாக வளர்ந்து பூக்கள் பூக்க இதை செய்யுங்கள்..!

இலைகள் மற்றும் பூக்கள் உதிர்வதை தடுக்க: 

பெரும்பாலும் பனிக்காலத்தில் தான் செடிகளில் இருக்கும் பூக்களும், இலைகளும் அதிகளவில் கொட்டும். பனிக்காலத்தில் செடியில் இருக்கும் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி கொட்டுகின்றன.

நாம் அதிகளவில் செடிகளில் இருக்கும் பூக்களையும் காய்களையும் மட்டும் தான் பராமரிக்கின்றோம். இலைகளை கவனிப்பதே இல்லை. ஆனால் ஒரு செடியின் வளர்ச்சிக்கு இலைகளும் முக்கிய காரணமாக இருக்கிறது.

அதனால் இலைகளை நாம் கட்டாயம் பராமரிக்க வேண்டும். அப்படி இலைகள் மற்றும் பூக்கள் உதிராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கருவேப்பிலை செடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்..!
  1. முதலில் நீங்கள் வேண்டாமென்று தூக்கி எரியும் வாழைப்பழ தோலை எடுத்து கொள்ள வேண்டும். பின் வாழைப்பழ தோலை வெயிலில் காயவைக்க வேண்டும்.
  2. பிறகு காயவைத்த வாழைப்பழ தோலை மிக்சியில் போட்டு தூள் போல அரைத்து கொள்ள வேண்டும். அதேபோல முட்டை ஓட்டையும் தூள் போல அரைத்து கொள்ள வேண்டும்.
  3. பின் காபி தூளுடன் நாம் அரைத்து வைத்துள்ள முட்டை ஓடு மற்றும் வாழைப்பழ தூளை போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
  4. இப்பொழுது செடிகளை பாதுகாக்கும் உரம் தயாராகிவிட்டது. இந்த உரத்தை 3 நாட்களுக்கு ஒரு முறை, செடியின் அடிப்பகுதியில் இருக்கும் மண்ணை கிளறி விட்டு உரத்தை போட வேண்டும். அதுபோல உரம் போட்ட பிறகும் மண்ணை கிளறி விட வேண்டும்.
  5. பின் செடிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

இதுபோல செய்து வந்தால் செடிகளில் இருக்கும் பூக்கள் மற்றும் இலைகள் உதிர்வதை தடுக்கலாம். அதேபோல பூக்களும் அதிகளவில் பூக்கும். செடிகளும் செழிப்பாக வளரும்.

முருங்கை மரத்தில் பூ உதிர்வதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்..?

 

இது போன்ற விவசாயம் பற்றி மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement