Winter Season Flower Plants Grow in Tamil
நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் கூறப் போகிறோம். நம் வீட்டில் எத்தனையோ வகையான பூச்செடிகளை வளர்த்திருப்போம். அதில் சில செடிகள் வெளியில் காலத்தில் நன்றாக வளர்ந்து பூக்கள் பூக்கும். சில வகையான செடிகள் மழைக் காலங்களில் பூக்க தொடங்கும். அதுபோல பனிக்காலத்திலும் சில பூக்கள் பூக்கும் செடிகள் இருக்கின்றன. அது என்ன செடிகள் என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில் இந்த பதிவின் மூலம் அது என்ன செடிகள் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
குளிர்காலத்தில் பூச்செடிகளை பராமரிப்பது எப்படி..? |
குளிர் காலத்தில் வளரும் பூச்செடிகள் எது..?
துலுக்க சாமந்தி பூ:
இதை துலுக்க சாமந்தி அல்லது கட்டிக்கேந்தி என்று சொல்வார்கள். இது சாமந்தி இனத்தை சேர்ந்த தாவரமாகும். இது மெக்சிக்கோ நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டது. இந்த துலுக்க சாமந்தி பூ செடி குளிர்காலத்தில் செழிப்பாக வளரக்கூடியது. அதுபோல குளிர்காலத்தில் இந்த செடியில் பூக்களும் அதிகமாக பூக்கும்.
நித்திய கல்யாணி பூ:
இது நித்தியக் கல்யாணி அல்லது பட்டிப்பூ என்று அழைக்கப்படும் பூ ஆகும். இந்த நித்தியக் கல்யாணி பூ வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. மடகாசுக்கரில் மட்டுமே காணப்பட்ட இந்த செடி, இப்பொழுது வெப்பமண்டல பகுதிகளிலும் காணப்படுகிறது. அதுபோல இந்த செடி பனிக்காலத்தில் பூக்கள் பூக்கும் செடி என்று சொல்லப்படுகிறது.
சங்கு பூ:
இந்த பூ சங்ககால பாடல்களில் இடம் பெற்றதால் இதை சங்கு பூ என்று சொல்கின்றோம். ஆனால் இதை கருவிளை மலர் என்று சொல்வார்கள். இது பல்வேறு வண்ணங்களில் பூக்கும் தாவரமாகும். இது பனிக்காலத்தில் பூக்க கூடியது.
வருடம் முழுவதும் பூக்கள் பூக்கும் பூச்செடிகள் எது..? |
சம்பங்கி பூ:
சம்பங்கி என்று சொல்ல கூடிய இந்த செடி அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடியது. இந்த சம்பங்கி பூ பெரும்பாலும் மாலையில் வைத்து கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த பூ அதிக நறுமணம் வீசக் கூடியது. இதில் இருந்து எடுக்கப்படும் சாறு நறுமண பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. குளிர் காலத்தில் தான் இந்த செடியில் பூக்கள் அதிகம் பூக்கின்றன.
ஒற்றை இதழ் சாமந்தி:
காலெண்டுலா (Calendula) என்று சொல்ல கூடிய இது சாமந்தி இனத்தை சேர்ந்த தாவரமாகும். மலர்கள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படுகிறது. இது ஒற்றை அல்லது இரட்டை அடுக்கு இதழ்களை கொண்டுள்ளது. இந்த ஒற்றை இதழ் சாமந்தி செடி குளிர்காலத்தில் பூக்கள் பூக்க தொடங்குகிறது.
ஆஸ்டர் மலர்:
இது பார்ப்பதற்கு சிறிய சூரியகாந்தி பூவை போல இருக்கும். இது பல வண்ணங்களை கொண்டுள்ளது. இதை வெட்டு மலர் என்று சொல்கிறார்கள். இது சீனாவை பூர்வீகமாக கொண்ட தாவரமாகும். பெரும்பாலும் இந்த ஆஸ்டர் பூக்கள் குளிர்காலத்தில் தான் பூக்க தொடங்குகின்றன.
மழைக்காலங்களில் செடிகளை பராமரிப்பது எப்படி..? |
இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Vivasayam in Tamil |