Lucky Things for Sagittarius in Tamil
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். நம் பொதுநலம் பதிவின் வாயிலாக தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பொதுநலம் பதிவின் வாயிலாக ஒரு அருமையான ஆன்மீக தகவல்கள் பற்றி பார்க்கலாம் வாங்க. அதாவது, 12 ராசிகளில் ஒன்றான தனுசு ராசிக்கார்களுக்கான அதிர்ஷ்டமான பொருட்கள் என்ன என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பொதுவாக, ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறை பலன்களை இருக்கும் அதேபோல், ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான அதிர்ஷ்டங்கள் இருக்கும். அதனை தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நாம் செயல்படுவதன் மூலம் வாழ்க்கையில் நற்பலன்களை பெறலாம். எனவே, 12 ராசிகளில் ஒன்பதாவது ராசியாக இருக்கும் தனுஷ் ராசிக்கு எதெல்லாம் அதிர்ஷ்டம் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். நீங்கள் தனுசு ராசிக்காரர்களாக இருந்தால் உங்களுக்கான அதிர்ஷ்ட்டமான பொருட்கள் என்ன என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தனுசு ராசி:
12 ராசிகளில் ஒன்பதாவது ராசியாக இருக்கும் தனுசு ராசி இடுப்பு, தொடைகள் உடல் பாகங்களுடன் இருக்கும். தனுசு ராசியை ஆளும் கிரகம் வியாழன் (குரு ) ஆகும். தனுசு ராசிக்குரிய வணங்க வேண்டிய கடவுள் தட்சணாமூர்த்தி, மகான்கள், சித்தர்கள் வழிபாடு ஆகும். தனுசு ராசி நட்சத்திரங்கள் மூலம், பூராடம் மற்றும் உத்திராடம் ஆகும். தனுசு ராசிக்காரர்கள் நேர்மையாகவும், பெருந்தமையாகவும் பயமின்றியும் இருப்பார்கள்.
தனுசு ராசிக்கு அதிர்ஷ்டமானவை:
- அதிர்ஷ்ட எண் – 6, 5, 3 மற்றும் 8
- அதிர்ஷ்ட கல் – மஞ்சள் சபையர் & டர்க்கைஸ் (Yellow Sapphire & Turquoise)
- அதிர்ஷ்ட நாட்கள் – புதன், வியாழன் மற்றும் வெள்ளி
- அதிர்ஷ்ட நிறம் – ஊதா, வெளிர் நீலம், வெள்ளை, ஆரஞ்சு
- அதிர்ஷ்ட எழுத்துக்கள் – ஏ, எம், எல் மற்றும் ஒய் (A, M, L, Y )
- அதிர்ஷ்டமான சோல் மேட்ஸ் – மேஷம், சிம்மம்
- அதிர்ஷ்டமான பிசினஸ் பார்ட்னர் – மேஷம்
- அதிர்ஷ்டமான தொழில் – ஆசிரியர், வங்கியாளர்கள், பப்ளிஷிங், விளம்பரம், சிவில் இன்ஜினியரிங், டிரேடிங் மற்றும் மார்க்கெட்டிங் ஆகிய தொழில்கள்.
கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பொருட்கள்..!
தனுசு ராசி நற்குணங்கள்:
தனுசு ராசிக்காரர்கள் நேர்மையாகவும், பரந்த மனப்பான்மை உடையவர்களாகவும், பெருந்தன்மை மிக்கவர்களாகவும் மற்றும் சுறுசுறுப்பு உடையவர்களாகவும் இருப்பார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் அச்சமில்லாமல் இருப்பார்கள். அதாவது, எதையும் பயமின்றி செய்யக்கூடியவர்கள். வாழ்க்கையை சுதந்திரமாகவும் ஆசையாகவும் வாழ நினைப்பவர்கள்.
தனுசு ராசி தீய குணங்கள்:
தனுசு ராசிக்காரர்கள் அதிக நம்பிக்கை உடையவர்களாகவும், சீரற்ற தன்மை மற்றும் தற்பெருமை உடையவர்களாக இருப்பார்கள். மேலும், ஆக்கிரமிப்பு குணத்துடனும் குறைந்த அளவு நிதானம் மற்றும் கவனக்குறைவு உடையவர்களாக இருப்பார்கள். இந்த ராசிக்கு அதிர்ஷ்டமற்ற கற்கள் முத்து மற்றும் வைரம் ஆகும்.
12 ராசிகளுக்குரிய கடவுள்கள் மற்றும் அதிபதி கிரகங்கள்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |