பணவரவு அதிகரிக்க பரிகாரம்
இன்றைய காலகட்டத்தில் ஏற்படும் பணத்தேவையை பூர்த்தி செய்ய பெரும்பாலானோர் கடன் வாங்கி ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். என்னதான் கடுமையாக உழைத்து பணம் சம்பாதித்தாலும் ஒரு சில தடைகளினால் வீட்டில் ஏழ்மை நிலை இருந்து கொண்டே தான் இருக்கும். இந்நிலை நீடிக்காமல் இருக்க நாம் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பல பரிகாரங்கள் உள்ளது. பரிகாரங்களில் ஒன்றான மிளகு பரிகாரம் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். பணத்தை நம்மை நோக்கி வர வைக்க மிளகு பரிகாரம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வீட்டில் பணக்கஷ்டம் உள்ளவர்களும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் இப்பரிகாரத்தை செய்யலாம். ஓகே வாருங்கள் பணவரவு அதிகரிக்க மிளகு பரிகாரம் எப்படி செய்வது என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் தடையில்லா பண வரவுக்கு வெள்ளிக்கிழமையில் ஏலக்காயை இப்படி பயன்படுத்துங்க..!
மிளகு பரிகாரம் செய்வது எப்படி.?
வீட்டில் பணவரவு அதிகரிக்க வீட்டில் இருக்கும் மிளகு மட்டும் போதும். வீட்டில் கஷ்டங்கள் நீங்கி பணவரவு அதிகரிக்க 5 மிளகை வைத்து எப்படி பரிகாரம் செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் 5 மிளகினை உங்கள் உள்ளங்கையில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு கைவிரல்களை மடக்கி மூடி கொள்ளுங்கள்.
பிறகு, உங்கள் வீட்டின் தலைவாசல் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு சென்று, அதாவது வீட்டிற்கு வெளியில் சென்று கிழக்கு பார்த்து நின்று கொள்ளுங்கள்.
இப்போது, இந்த மிளகினை கையில் வைத்து 7 முறை தலையை சுற்றவும். அதாவது, 7 முறை வலது பக்கமாகவும் 7 முறை இடது பக்கமாகவும் சுற்ற வேண்டும். இவ்வாறு தலையை சுற்றும்போதே உங்களுக்கு இருக்கும் ஏழ்மை நிலை நீங்கி பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.
அடுத்து, கையில் உள்ள 5 மிளகில், 4 மிளகினை எடுத்து 4 திசைகளிலும் ஒவ்வொன்றாக வீச வேண்டும். பிறகு கடைசியாக இருக்கும் 1 மிளகினை உங்கள் தலைக்கு நேராக மேல்நோக்கி வீச வேண்டும்.
அதன் பின், உங்கள் கை கால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் வரவேண்டும்.
வீட்டில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்க கல் உப்பு மட்டும் போதும்
பரிகாரம் எப்போது செய்ய வேண்டும்.?
இப்பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் பணவரவு அதிகரிக்கும் என்று ஆன்மீக ரீதியாக நம்பப்படுகிறது.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |