தைப்பூச வழிபாடு
முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் நமக்கு இருக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு வரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. முருகப்பெருமானை போற்றி அருணகிரி சுவாமிகள் பல்வேறு பாடல்களை இயற்றி வணங்கியுள்ளார். தைப்பூசம் என்றாலே முருகப்பெருமான் வழிபாடு தான். அதாவது, முருகப்பெருமானுக்கு சக்திவேலை தந்து அம்பிகையின் அருளை பெற்ற நாளான தைப்பூசம் அன்று முருப்பெருமானை வணங்கி வழிபடுவதன் மூலம் நம் வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும். ஆகையால், தைப்பூசம் வழிபாடு எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
பொதுவாக, தைப்பூசம் அன்று முருகனுக்கு காவெடி எடுத்தல், முருகன் கோவிலில் அன்னதானம் செய்தல் போன்ற பல விசேஷங்கள் நடைபெறும். அதேபோல், கோவில்களில் மட்டுமில்லாமல் வீடுகளிலும் தைப்பூசம் வழிபாடு செய்வது மிகவும் அவசியம். அதனை பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
தைப்பூசம் அன்று இதனை மட்டும் செய்யுங்கள்.. உங்கள் வீட்டில் அனைத்து வளமும் கிடைக்கும்..
Thaipoosam Natchathiram Valipadu Murai:
இந்த வருடம் 25.01.2024 அன்று தை 11 ஆம் தேதி தைப்பூசம் நாள் வருகிறது. இந்நாளில், காலை 09.20 AM மணிமுதல் 10.30 AM வரை தைப்பூசம் வழிபடுவதற்கு உகந்த நேரமாக இருக்கிறது. அதேபோல்,மாலை 06.15 PM முதல் 07.15 PM வரை வழிபடலாம்.
முதலில் முருகப்பெருமானின் திருவுருப்படத்தை எடுத்து மாலை, பூ மற்றும் மஞ்சள் குங்குமம் இட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். முடிந்தவரை சிகப்பு நிற மலர்களை கொண்டு அலங்காரம் செய்யுங்கள். முக்கியமாக முருகப்பெருமானின் வேல் வைத்து வழிபடுவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும்.
அடுத்து, முருகப்பெருமானுக்கு நெய்வேத்தியமாக, சர்க்கரை பொங்கல் அல்லது பாயாசம் போன்ற ஏதேனும் ஒரு இனிப்பு உணவுகளை படைக்க வேண்டும்.
பின்பு, இதுனுடன் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். வழிபடும்போதும், முருகப்பெருமானை மனமுருக நினைத்து வேல் பதிகம், கந்தர் கலிவெண்பா உள்ளிட்ட ஏதேனும் ஒரு முருகப்பெருமானின் பாடலை பாடுங்கள். முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று வழிப்படுவதன மூலம் இன்னும் அதிகமான பலன்களை பெறலாம்.
தைப்பூசம் நாளில் விரதம் இருந்து, பிறர்க்கு அன்னதானம் சித்தாள், உதவுதல் போன்ற விஷயங்களை செய்து வருவதன் மூலம் முருகப்பெருமானின் ஆசியும் அருளும் கிடைக்கும்.
தினமும் சொல்லக்கூடிய முருகனின் சத்ரு சம்ஹார வேல் பதிகம்
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |