மாட்டு கோமியத்தை வீட்டில் தெளிக்க காரணம் என்ன தெரியுமா.?

What is the reason for spraying komiam at home in tamil

மாட்டு கோமியத்தை வீட்டில் தெளிக்க காரணம்

வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் மாட்டு கோமியத்தை வீட்டில் தெளிப்பதற்கான காரணம் என்னவென்றுதான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக முந்தைய காலகட்டத்தில் பெண்கள், மாட்டு சாணத்தை வைத்து வீட்டின் வாசலை தெளிப்பதும், அதனுடைய கோமியத்தை வீட்டிற்குள் தெளிப்பதும் ஒரு வழக்கமாகவே இருந்தது,  இதனை தெளிப்பதற்கு காரணம் என்னவென்று  யாரிடமாவது கேட்டால், இதனை ஒரு சாஸ்திரம்  என்று சொல்வார்கள். மேலும் வீடுகளில் மாட்டு கோமியத்தை தெளிப்பதற்கான அறிவியல் காரணம் என்னவென்றும், ஆன்மிகம் காரணம் என்னவென்றும்  நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க. 

இரவில் நாய், மாடு அழுவது நல்லதா கெட்டதா..! இரண்டில் எது உண்மை..?

மாட்டு கோமியத்தை வீட்டில் தெளிப்பதற்கான ஆன்மிகம் காரணம்:

மாட்டு கோமியத்தை வீட்டில் தெளிப்பதினால், ஆன்மிக ரீதியாக சொல்லப்படுவது  என்னவென்று தெரிந்துகொள்வோம். பொதுவாக எந்த ஒரு வீடாக இருந்தாலும், இடமாக இருந்தாலும் அல்லது தொழில் செய்யும் இடமாக இருந்தாலும், அஷ்டலட்சுமிகளும்,  அதிர்ஷ்ட தேவைதைகளும் குடியிருப்பார்களாம்.  அதில், வீட்டிற்கு ஆவதா துர்தேவதைகள் குடியிருக்குமாம்.  எனவே அந்த துர்தேவதையை  விரட்டி அடிப்பதற்காகத்தான், வீடு முழுவதும் கோமியத்தை தெளிப்பார்கள்.  இந்த கோமியத்தை வீட்டில் தெளிப்பதினால் தான், லட்சுமி  வீட்டில் ஆசி தருவாள்  என்று சொல்லப்படுகின்றது.  மேலும் கோமியத்தை வீட்டில் தெளிக்கும் பொழுது செல்வம் பெருகும் என்றும் சொல்லப்படுகின்றது, அதோடு மட்டுமின்றி பண வரவுகளை தரும் என்றும் கருதப்படுகின்றது. 

மாட்டு கோமியத்தை வீட்டில் தெளிப்பதற்கான அறிவியல் காரணம்:

பொதுவாக பலரும் மாட்டு கோமியத்தை வீட்டில் தெளித்து வருவார்கள், இன்னும் ஒரு சிலர் அந்த கோமியத்தை குடிப்பார்கள்.  இதற்கு காரணம் என்ன தெரியுமா.?  பொதுவாக மாட்டின் கோமியம் மட்டுமின்றி அதனுடைய சாணம், பால், தயிர் போன்றவையும் பல மருத்துவங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன, இதனை வீடு முழுவதும் தெளிப்பதற்கு காரணம் என்ன.?

பசுவின் கோமியமும், சாணமும் ஒரு சிறந்த கிருமி நாசினி என்று சொல்லப்படுகின்றது, இதனை வீடு முழுவதும் தெளிப்பதினால், பாக்டீரியாக்கள் மற்றும் பூச்சிகளின் தொல்லைகள் இல்லாமல், வீடு தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் தெளிக்கப்படுகிறது.

பசுவின் கோமியத்தையும், சாணத்தையும் கையால் எடுத்து தெளிக்கும் பொழுது, உடலில் எந்த விதமான கிருமிகளும் தாக்காது என்றும் சொல்லப்படுகின்றது. 

இதையும் படியுங்கள் 👇

பசுவை கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா..!
பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன் தெரியுமா?

 

மேலும் இது போன்ற வியக்கத்தக்க விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉Interesting Information