Instant Parotta Business Plan
இன்றைய காலத்தில் உள்ள மனிதர்கள் அனைவரும் தனித்து தான் இருக்கு வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி தனித்து சிறப்பாக மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்கு அனைவரும் முதலில் சுய தொழிலை தான் தேர்வு செய்கிறார்கள். ஆனால் சுயதொழில் என்பது சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் கூட அதனை செய்வதில் தான் பெரிய விஷயமே இருக்கிறது.
ஏனென்றால் சுயதொழிலை பொறுத்தவரை அனைவரும் நிறைய வகையான தொழிலை செய்து வருகிறார்கள். அதனால் நாம் சுயதொழில் செய்வதற்கு முன்பாக மற்றவர்களை விட எப்படி வித்தியாசமாக செய்து அதிக லாபம் மற்றும் வருமானம் பெறுவது என்று தான் யோசிக்க வேண்டும். அந்த வகையில் இன்று அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக விளங்கும் பரோட்டா தொழிலை வித்தியாசமாக செய்து என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
வீட்டில் இருந்து செய்யும் தொழில்:
இன்று பார்க்க போகும் தொழிலிற்கு கடை என்பது முக்கியத்துவம் கிடையாது. ஏனென்றால் இன்று Instant Parotta தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். பரோட்டா தொழில் என்று நாம் சாதாரணமாக நினைக்க முடியாது. ஏனென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு என்று அது பரோட்டா தான்.
இத்தகைய தொழிலிற்கான டிமாண்ட் என்பது என்றும் குறையாத ஒன்றாக கருதப்படுகிறது.
தேவைப்படும் இடம்:
நீங்கள் Instant Parotta தொழிலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு பெரிய இடம் எதுவும் வேண்டாம். உங்களுடைய வீட்டில் சிறிய பகுதியில் மின்சார வசதியுடன் கூடிய ஒரு இடமே போதுமானது.
தேவைப்படும் மூலப்பொருள்:
- Parotta Making Machine
- மைதாமாவு
- முட்டை
- Zip Lock Pouch
மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் உங்களுக்கு தேவைப்படும் பரோட்டாக்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு வாங்கி கொள்ளுங்கள். அதேபோல் இந்த தொழிலிற்கு FSSAI லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் முதலீடு:
இந்த தொழிலுக்கு முக்கிய அம்சமாக இருக்கும் Parotta Making Machine மெஷினின் விலை ஆனது அதனுடைய விலை மற்றும் மாடலை பொறுத்து மாறுபடும். இத்தகைய மெஷினின் ஆரம்ப விலை என்பது 30,000 ரூபாய் ஆகும்.
ஆகவே இந்த தொழிலை செய்வதற்கு தோராயமாக 1 லட்சம் ரூபாய் முதலீடாக கையில் வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.
இதையும் படியுங்கள்⇒ இப்ப மட்டும் இல்லங்க எப்போதுமே டாப்ல இருக்க போறது இது தாங்க.
பரோட்டா செய்யும் முறை:
சைவம் மற்றும் அசைவம் என அனைத்து ஹோட்டலிலும் மூன்று வேளையும் தவறாமல் இருக்கும் ஒரு உணவு என்றால் அது பரோட்டா தான். அதேபோல் யாரும் இப்போது பெரும்பாலும் பரோட்டாவை கையினால் செய்வது இல்லை.
அதற்கு பதிலாக Instant முறையில் விற்கும் Parotta-ஐ தான் வாங்குகின்றார்கள். அதனால் வீட்டிலேயே Parotta Making Machine ஐ பயன்படுத்தி பரோட்டாக்களை செய்து அதனை 4 அல்லது 5 என வைத்து பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
மேலும் நீங்கள் மிஷின் வாங்கும் இடத்திலேயே அதனை எவ்வாறு Operate செய்வது என்ற முறையும் கற்றுக்கொடுக்கப்படும். ஒருவேளை அது உங்களுக்கு புரியவில்லை என்றால் வேலைக்கு ஆட்கள் வைத்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்ய வேண்டிய இடம்:
சிறிய மற்றும் பெரிய ஹோட்டல், ரெஸ்டாரண்ட், ரோட்டு கடை ஆகிய இடங்களில் விற்பனை செய்யலாம். அதேபோல் சிலர் ஸ்னாக்ஸ் கடைகளில் Instant Parotta-ஐ வாங்கி சென்று வீட்டில் செய்து சாப்பிடுவார்கள். அதனால் பெரிய மற்றும் சிறிய ஸ்னாக்ஸ் கடைகளில் விற்பனை செய்யலாம்.
ஆனால் நீங்கள் செய்யும் தொழிற்கும் தரம் என்பது முதலிடத்தில் இருந்தால் மட்டுமே வியாபாரம் நன்றாக இருக்கும்.
மேலும் நீங்கள் வசிக்கும் தெரு, பக்கத்து தெரு என அங்கு வசிக்கும் மக்களுக்கு நீங்கள் வீட்டில் இருந்தே விற்பனை செய்யலாம்.
வருமானம்:
நீங்கள் தயார் செய்து பேக்கிங் செய்து வைத்துள்ள Instant Parotta ஒரு பாக்கெட்டின் விலை தோராயமாக 90 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனால் ஒரு நாளைக்கு நீங்கள் 50 பாக்கெட்டுகள் விற்பனை செய்தால் 4500 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
மேலே சொல்லப்டபட்டுள்ள முறையில் தொடர்ச்சியாக விற்பனை செய்தால் ஒரு வாரத்திற்கு 42,000 ரூபாய் முதல் 31,500 ரூபாய் வரை லாபம் மற்றும் வருமானம் பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2023 |