ஆண்களை பாதிக்கும் ஹெர்னியா நோயை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Hernia Meaning in Tamil

Hernia Meaning in Tamil..! 

வணக்கம் நண்பர்களே… இன்றைய பதிவில் ஹெர்னியா என்றால் என்ன..? அதன் வகைகள் போன்ற ஹெர்னியா பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். ஆண்களை பெரிய அளவில் தாக்ககூடிய நோய் தான் இந்த ஹெர்னியா. இந்த Hernia என்பதை தமிழில் குடலிறக்கம் என்று கூறலாம். இந்த குடலிறக்கம் நோயை பற்றி உங்களுக்கு தெரியுமா..? இந்த பதிவின் மூலம் இதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் பாருங்கள் ⇒ Vertigo என்றால் என்ன தெரியுமா

குடலிறக்கம் என்றால் என்ன..?  

நமது வயிற்றில் உள்ள தசைகள் பலவீனமடைந்து, இந்த தசைகள் வீக்கம் அடைவதால் குடலிறக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்த நோய் ஆண்களையே அதிகளவில் பாதிக்கிறது. இது ஆண்களுக்கு ஏற்படக்கூடிய குடல் சம்மந்தப்பட்ட நோயாகும்.

இந்த பிரச்சனை குடலின் அடிப்பகுதியில் ஏற்படுகிறது. இந்த குடலிறக்கம் பிரச்சனை சிலருக்கு சிறு வயதிலிருந்தே காணப்படுகிறது. திசுக்களில் முறிவு ஏற்படுவதால் இந்த குடலிறக்க பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த குடலிறக்கம் பாதிப்பு ஏற்படுவதால் இரத்த நாளங்களில் தசைகள் அழுத்தத்தை செலுத்துகின்றன. மேலும் இது இரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது. இதனால் பல சிக்கல் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இந்த பிரச்சனை அடிவயிற்றில் மட்டும் தான் ஏற்படும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த பிரச்சனை சிலசமயம் தொடை மற்றும் இடுப்பு பகுதிகளில் கூட ஏற்படுகிறது.

இந்த பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்று ஒரு கட்டத்தில் நமது உடலை மிகவும் பலவீனமடைய செய்து விடுகிறது.

இந்த குடலிறக்க பிரச்சனை 100 சதவீத ஆண்களில் 85% பேரை பாதிக்கின்றது. இந்த ஹெர்னியா பாதிப்பு ஏற்பட்டால் குடல் பலவீனமான பகுதிக்கு தள்ளப்பட்டு அடிவயிற்றை கிழிக்க கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

குடலிறக்கம் காரணம் என்ன..? 

  • உடலை வலுவிழக்க செய்யும் காரணிகள் அதிக எடையை கொண்டிருந்தால்  இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
  • அதுமட்டுமில்லாமல் அடிவயிற்றில் அதிக நீர் சேர்வதாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
  • அதிக எடை தூக்குவதாலும் இந்த ஹெர்னியா பாதிப்பு ஏற்படுகிறது.
  • சில அறுவை சிகிச்சைகளால் உங்கள் தசைகளில் ஏதாவது காயம் இருந்தாலும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
  • நாள்பட்ட இருமல் காரணமாக கூட இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
  • பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் தசைகள் விரிவடைவதாலும் இந்த ஹெர்னியா பாதிப்பு பெண்களையும் தாக்குகிறது.

குடலிறக்கம் வகைகள்:

  1. ஆம்ப்ளிக்கள் ஹெர்னியா
  2. ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா
  3. இன்ஸிஜனல் ஹெர்னியா
  4. ஹாயிட்டல்  ஹெர்னியா
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com