PCOD பற்றிய சில தகவல்கள்.!

Advertisement

PCOD என்றால் என்ன?

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் PCOD என்றால் என்ன அவை எப்படி உருவாகிறது என்று அதனை பற்றிய சில தகவல்களை நம் பதிவில் காணலாம். PCOD என்பது இன்றைய கால கட்டங்களில் அதிக பெண்களுக்கு வரும் கர்ப்பப்பை சம்பந்தமான நீர்க்கடியின் பிரச்சனைகள் ஆகும். இவை ஒரு ஹார்மோன் சுரப்பியின் குறைபாடுகள் ஆகும். இதனால் திருமணம் ஆன தம்பதியர்களுக்கு குழந்தை இல்லாமல் போய்விடுகிறது.  மேலும் PCOD-யின் முழு அர்த்தத்தை நம் பதிவில் படித்து அறியலாம் வாங்க.

சினைப்பை நோய்கள் அர்த்தம் என்ன தெரியுமா?

 

PCOD Meaning in Tamil:

PCOD என்பதற்கான அர்த்தம் polycystic ovarian syndrome என்றும் சுருக்ககமாக (PCOD) என்றும் அழைக்கப்படுகிறது. இவை ஒரு கூட்டு நோயின் அறிகுறிகள் என்றும் சொல்லப்டுக்கிறது. சினைப்பை நோய்கள் மரபுவழி சூழல் என இரண்டும் இணைத்த கூட்டு காரணி என்றும் அழைக்கப்படுகிறது.

இவை குடும்பத்தில் முன்பு யாருக்கும் காணப்பட்டிருந்தால் தலைமுறையாக வரும் என்றும் சொல்லப்படுகிறது. இவை பொதுவாக 18 வயதில் இருந்து 45 வயது உள்ள பெண்களுக்கு ஏற்படும் அகச் சுரப்பிகள் குறைபாடுகள் ஆகும்.

இந்த PCOD வருவதற்கான முக்கிய காரணம் என்ன தெரியுமா, நாம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவு பலமுறைகள் ஆகும்.

பெண்களுக்கு ஏற்படும் நீர்கட்டியானது நோய் அல்ல, அவை ஒரு குறைபாடு ஆகும். கர்ப்பபையில் இருக்கும் சினை மூட்டைகள் வளர்ச்சி அடையாமல் வெளிவராத காரணத்தினால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் சிலர்க்கு கரு முட்டைகளானது தாமதமாக உருவாகும் சிலர்க்கு கரு முட்டையின் வளர்ச்சிகள் இருக்காது. இதனால் ஹார்மோன்கள் பிரச்சனைகள் ஏற்படும்.

PCOD பிரச்சனைகளால் பெண்களுக்கு உள்ள ஹார்மோன்கள் சுரக்காமல் ஆண் ஹார்மோன் சுரப்பிகள் அதிக அளவு சுரக்கின்றது. இதனால் பெண்களுக்கு தேவையில்லாத இடங்களில் முடி வளர்ச்சிகள் ஏற்படுகிக்கிறது. அதுமட்டுமின்றி உடல் எடை அதிகரிக்க செய்க்கிறது.

PCOD மூலம் பெண்களுக்கு தலை முடி உதிர்வு மற்றும் முகப்பருக்கள் ஏற்படுதல் போன்ற பிரச்சனைகள் ஹார்மோன்களின் மாறுபடுவதால் ஏற்படுகிறது. அதோடு மலட்டுத்தன்மை பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

சினைப்பை நோய்களுக்கு மருந்து என்னவென்றால் ஆரோக்கியமான முறையில்  உணவு எடுத்துக்கொள்ளுதல் மற்றும் தினமும் உடல் பயிற்சி செய்வதே ஆகும். இவை போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களினால் இதற்கான சிகிச்சைகள் ஆகும்.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement