வனப்பு என்பதன் பொருள் யாது | Vanappu Porul in Tamil
பொதுவாக அதிகளவு நாம் பேசும் வார்த்தைக்கும் நாம் பேசாத ஒரு சில வார்த்தைக்கும் அர்த்தம் தெரிவதில்லை. நாம் தினமும் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன என்பதை தினமும் பொதுநலம்.காம் பதிவிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வனப்பு என்றால் என்ன? அதன் பொருள் யாது? என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
வனப்பு என்பது ஒருவரின் உடலுருவம் முழுவதிலும் தோன்றும் அழகு. அதுபோல ஒரு நூல்-முழுமையில் காணப்படும் அழகைத் தொல்காப்பியம் வனப்பியல் எனக் குறிப்பிட்டு அதனை எட்டு வகையாகப் பகுத்தது.
வனப்பு எத்தனை வகைப்படும்:
வனப்பு எட்டு வகைப்படும், அவை பின்வருமாறு
அம்மை
அழகு
தொன்மை
தோல்
விருந்து
இயைபு
புலன்
இழைபு
வனப்பு என்பதன் பொருள் என்ன:
எட்டு வகை வனப்புகளில் அமைந்த நூல்கள்.
திருக்குறள், ஆத்திசூடி போன்ற நூல்களில் அமைந்துள்ளது அம்மை.
நெடுந்தொகை போன்ற நூல்களில் அழகு இடம் பெற்றுள்ளது.
சிலப்பதிகாரம் (நச்சினார்க்கினியர்), இராம சரிதம், தகடூர் யாத்திரை போன்ற நூல்களில் தொன்மை இடம் பெற்றுள்ளது.
மலைபடுகடாம் (இளம்பூரணர்) நூல்களில் தோல் இடம் பெற்றுள்ளது.
முத்தொள்ளாயிரம் நூல்களில் விருந்து இடம் பெற்றுள்ளது.
மணிமேகலை, பெருங்கதை போன்ற நூல்களில் இயைபு அமைந்துள்ளது.
முக்கூடற்பள்ளு, குறவஞ்சி, ஏற்றப்பாட்டு, குழந்தைப் பாடல்கள் நூல்களில் புலன் அமைந்துள்ளது.
கலித்தொகை, பரிபாடல் போன்ற நூல்களில் இழைபு அமைந்துள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>