VPA என்றால் என்ன தெரியுமா?

Advertisement

VPA meaning in tamil

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் VPA என்றால் என்ன அவை எதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது என்று  பார்க்கலாம். VPA என்பது அதிகமாக நாம் உபயோகிக்கும் மொபைல்களில் பார்த்திருக்கலாம், இவை UPI மூலம் VPA உருவாக்கி வங்கி கணக்குகளை மொபைல் போன் பயன்படுத்தி பணத்தை ஒருவரிடம் இருந்து மற்றவர்க்கு எளிதாக அனுப்புவதற்கு பயன்படும் ஒரு பண பரிவார்த்தை ஆகும். மேலும் இவற்றை பற்றிய தகவல்கள் நம் பதிவில் தொடர்ந்து பார்க்கலாம் வாங்க.

UPI Pin Meaning in Tamil – UPI பின் என்பதன் தமிழ் பொருள்..!

 

VPA என்றால் என்ன?

VPA (Virtual Payment Address) அதாவது தமிழில் மெய்நிகர் கட்டண முகவரி என்று சொல்லப்படுகிறது.

மெய்நிகர் கட்டண முகவரி என்பது நீங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள கணக்கிற்க்கான மின் அஞ்சல் முகவரி ஆகும்.

UPI அடிப்படையில் ஒரு நாளில் எந்த நேரம் வேண்டுமானாலும் பணம் அனுப்ப பயன்படுகிறது. இவற்றை பயன்படுத்துவதற்கு சரியான பயனர்பெயரை வைத்திருப்பது அவசியம், இந்த பயனர் பெயரைத்தான் VPA என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மின் அஞ்சல் முகவரி வைத்திருப்பதால் எளிதாக மின் அஞ்சல் அனுப்புவது, பணத்தினை மற்றவருக்குஎளிதாக அனுப்புவது போன்றவற்றிக்கு எளிதாக இருக்கிறது.

மேலும் இதில் பணத்தை பெறுவதற்கான  கோரிக்கைகளை வைப்பதற்கும் இவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

VPA மூலம் பணத்தை அனுபவம், அதனை சேகரிக்கவும் முக்கிய இடம்பெற்றுள்ளது.

VPA கணக்கை உருவாக்குவது எப்படி?

  • முதலில் உங்கள் மொபைல் போனில் உங்களுக்கு விருப்பம் உள்ள UPI ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு உங்கள் UPI பயன்பாட்டில் உங்களுடைய முகவரியை கொடுக்க வேண்டும்.
  • அடுத்ததாக அதில் உள்ள VPA ஐ தேர்வு செய்ய வேண்டும்.
  • VPA ஐ வாங்கி கணக்கிற்கு இணைக்க வேண்டும்.
  • அதன் பிறகு அதற்கு தேவையான ஆவண விவரங்களை அளிக்க வேண்டும்.

VPA உருவாக்குவதால் ஏற்படும் நன்மைகள்:

VPA உபயோகிப்பதன் மூலம் ஒரு நபருக்கு எந்த இடத்தில் இருந்தாலும் பணத்தை அனுப்புவதற்கு உதவியாக இருக்கிறது.

அதோடு IFSC  கோடுகள் மற்றும் பிற வங்கிக்கணக்கு பற்றிய விவரங்கள் எதுவும் அதில் உள்ளிட வேண்டுய அவசியம் எதுவுமில்லை.

இவற்றை பயன்படுத்துவதற்கு  எந்த சிரமங்கள் இல்லாமல் எளிதாக பயன்படுத்த உதவியாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

VPA பணம் அனுப்பும் முறை:

  • முதலில் உங்கள் UPI பயன்பாட்டில் உள்நுழைந்து உங்கள் பின்னை உள்ளிடவும்.
  •  அடுத்ததாக நிதி பரிமாற்றத்திற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • பயனாளியின்  VPA ஐ உள்ளிடவும்.
  • அடுத்ததாக பணத்தின் தொகையை உள்ளிடவும்
  • ஒரு முறை விவரங்களை உறுதிப்படுத்தவும்.
  • உங்கள் MPIN ஐ உள்ளிடவும்.
  • அதன் பிறகு பணம் செலுத்தப்படும்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement