கற்றாழையை மட்டும் இப்படி பயன்படுத்தி பாருங்க..! நீங்களே போதும்னு சொன்னாலும் முடி நிற்காமல் வளரும்..!

Advertisement

Aloe Vera Long Hair Oil

வாசகர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு பயனுள்ள பதிவாக இருக்கும்.  இன்றைய நிலையில் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. இருந்தாலும் அனைவரும் இருக்கின்ற முடி உதிராமல் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் பெண்கள் அப்படி கிடையாது. பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக அவர்கள் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் சேர்க்கப்பட்ட எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் நாளடைவில் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்துவிடுகிறது. முடி நீளமாக வளர வேண்டும் என்று ஆசைபட்டால் மட்டும் போதாது. அதற்கு நாம் முடியை பராமரிக்க வேண்டும். நீங்களே போதும் என்று சொல்கின்ற அளவிற்கு முடி வளர வேண்டுமா..? அப்போ இந்த எண்ணெயை மட்டும் தடவுங்க போதும்..! வாங்க நண்பர்களே அந்த எண்ணெய் எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கற்றாழை எடுத்து கொள்ளவும்:

கற்றாழை எடுத்து கொள்ளவும்

முதலில் 2 கற்றாழை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை சுத்தமாக கழுவ வேண்டும். அதில் இருந்து மஞ்சள் நிறத்தில் ஜெல் வரும். அதை நீக்கி விட்டு கற்றாழையை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.

 கற்றாழையில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் முடி உதிர்வதை நிறுத்தி முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர உதவி செய்கிறது. மேலும் இது முடியை ஷைனிங்காகவும் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இது பொடுகை தலையில் படியவிடாமல் பார்த்து கொள்கிறது.  
மூன்றே நாட்களில் உங்கள் முகத்தை பார்த்து எப்படி இவ்ளோ கலரா மாறிடீங்கன்னு கேட்க வேண்டுமா..? அப்போ இப்படி செய்யுங்க..!

கடாயை அடுப்பில் வைக்கவும்:

கடாயை  வைக்கவும்

முதலில் ஒரு இரும்பு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளவும். பின் அதில் உங்களுக்கு தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடுபடுத்தி கொள்ளவும்.

அடுப்பை குறைத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்துள்ள கற்றாழையை போட்டு நன்றாக கலந்து விட வேண்டும்.

கற்றாழையில் இருக்கும் சத்துக்கள் எண்ணெயில் சேரும் வரை நன்றாக கலந்துவிட வேண்டும். எண்ணெய் 20 நிமிடம் நன்றாக கொதிக்கட்டும். பின் கற்றாழையின் நிறம் மாறியதும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👉 உங்கள் முடிக்கு இந்த எண்ணெயை மட்டும் தடவி பாருங்க..! நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவுக்கு முடி வளர்ந்துவிடும்..!

பின் எண்ணெய் ஆறியதும் அதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இந்த எண்ணெயை நீங்கள் குளிக்க செல்லும் முன் உங்கள் முடியின் வேரில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

30 நிமிடம் வைத்திருந்து பின் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலையை அலசிக் கொள்ளலாம். இதுபோல வாரத்திற்கு 2 முறை என்று 1 மாதம் வரை செய்து வந்தால் உங்கள் முடி வளர்ச்சியின் வேகத்தை நீங்களே காண்பீர்கள்.

3 நாட்களில் உங்கள் முகம் நிலவு போல் ஜொலிக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க நிலவை விட அழகாக ஜொலிக்கலாம்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement