அவுரி பவுடர் ஹேர் டை | Avuri Powder Hair Dye in Tamil
இயற்கையான முறையில் நரை முடிக்கு ஹேர் டை பயன்படுத்த வேண்டும் என்று விரும்பும் நபரா நீங்கள். அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் நண்பர்களே இன்று நாம் இயற்கையான முறையில் ஹேர் டை தயார் செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த ஹேர் டையை தலைக்கு அப்ளை செய்வதன் மூலம் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆக தைரியமாக இந்த ஹேர் டையை தயார் செய்து தலைக்கு அப்ளை செய்யலாம். இருப்பினும் தொடர்ச்சியான சளி, ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் இந்த ஹேர் டையை தலைக்கு உபயோகிக்க வேண்டாம். சரி வாங்க இந்த ஹேர் டை எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- மருதாணி பவுடர் – ஒரு டேபிள் ஸ்பூன்
- அவுரி பவுடர் – 4 டேபிள் ஸ்பூன்
இந்த இரண்டு பொருட்களுமே நாட்டுமருந்து கடைகள், மல்லிகை கடை, டிபார்ட்மென்ட் ஸ்டோர் என்று அனைத்து இடங்களிலும் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரே வாரத்தில் நரை முடி கருப்பாகவும் அதிசயம்..! இந்த எண்ணெய் மட்டும் தடவி பாருங்கள்..!
செய்முறை:
முதல் நாள் இரவு மருதாணி பவுடரை நாம் மிக்ஸ் செய்து வைத்திட வேண்டும். அதாவது ஒரு பவுலில் ஒரு டேபிள் ஸ்பூன் மருதாணி பவுடரை எடுத்துக்கொள்ளுங்கள். பின் அதில் வெது வெதுப்பான நீரை கொஞ்சம் கொஞ்சமாக கலந்து பேஸ்ட் போல் கலந்து இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
பின் மறுநாள் இன்னொரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் 4 டேபிள் ஸ்பூன் அவுரி பவுடர் சேர்க்கவும். பின் வெது வெதுப்பான நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்திற்கு கலந்துகொள்ளவும்.
பிறகு இந்த பேஸ்ட்டை மருதாணி பேஸ்ட்டுடன் கலந்து 1/2 மணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும்.
1/2 மணி நேரம் கழித்து தலைக்கு இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யலாம். அப்ளை செய்த பிறகு தலையில் 1 மணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். பின் தலைக்கு எந்த ஒரு ஷாம்பும் பயன்படுத்தாமல் தலை அலசலாம். அல்லது மைல்ட் ஷாம்பு பயன்படுத்தி தலை அலசலாம். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை மட்டும் செய்து வந்தால் போதும் உங்கள் நரைமுடி நிரந்தரமாக கருமையாக மாறிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நரைமுடி 2 நிமிடத்தில் மறைய இந்த ஹேர் டையை அப்ளை செய்யுங்கள் போதும்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |