பனிக்காலத்தில் பொலிவிழந்து காணப்படும் முகம் நன்கு பொலிவு பெற இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!

Advertisement

 Beauty Tips for Face Glow in Tamil

பொதுவாக பனிக்காலம் வந்துவிட்டாலே நமது முகம் வறட்சியாகி பொலிவிழந்து காணப்படும். அப்படி உங்களின் முகமும் பொலிவிழந்து காணப்படுகிறதா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் சிறந்த மற்றும் பயனுள்ள அழகு குறிப்புகள் பற்றி பார்த்து கொண்டு வருகின்றோம். அந்தவகையில் இன்றைய பதிவிலும் நமது முகம் நன்கு பொலிவு பெற உதவும் சில அழகு குறிப்புகள் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Natural Beauty Tips for Face at Home in Tamil:

Beauty tips at home for face in Tamil

பனிக்காலத்தில் நமது முகம் மற்ற காலகட்டத்தில் இருப்பதை விட நமது முகம் மிகவும் பொலிவிழந்து காணப்படும். அப்படி பொலிவிழந்து காணப்படும் முகத்தை நன்கு பொலிவு பெற செய்வதற்கான சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம்.

டிப்ஸ் – 1

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. குங்குமப்பூ – 1 டீஸ்பூன் 
  2. ரோஸ் வாட்டர் – 4 டீஸ்பூன் 
  3. கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன் 
  4. பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன் 
  5. வைட்டமின் E கேப்சூல் – 4 

முதலில் 1 டீஸ்பூன் குங்குமப்பூ, 4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் முகத்தில் பருக்களினால் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்

பின்னர் அதனுடனே 4 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அது நன்கு பசைபோல் மாறி இருக்கும்.

அதனை ஒரு கண்ணாடி அல்லது ஏதேனும் மூடிபோட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து  காலையில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

டிப்ஸ் – 2

Natural Beauty Tips for Face at Home in Tamil

தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. ரோஜா பூ இதழ்கள் – 2 கைப்பிடி அளவு 
  2. ரோஸ் வாட்டர் – 4 டீஸ்பூன் 
  3. கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன் 
  4. பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன் 
  5. கிளிசரின் – 1 டீஸ்பூன் 
  6. வைட்டமின் E கேப்சூல் – 4 

முதலில் ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்துவைத்துள்ள 2 கைப்பிடி அளவு ரோஜா பூ இதழ்கள் மற்றும் 4 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்

பின்னர் அதிலிருந்து சாற்றினை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடனே 4 வைட்டமின் E கேப்சூலில் உள்ள சாற்றினை மட்டும் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அது நன்கு பசைபோல் மாறி இருக்கும்.

அதனை எடுத்து ஒரு கண்ணாடி அல்லது ஏதேனும் மூடிபோட்ட பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து  காலையில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.

இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகம் நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 

 

Advertisement