ஒரே வாரத்தில் கை கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

கை கால் கருமை நீங்க டிப்ஸ்..! Beauty Tips for Legs and Hands in Tamil..!

Beauty Tips for Legs and Hands in Tamil:- வணக்கம் நண்பர்களே..! இன்று அழகு குறிப்பு பதிவில் ஒரே வாரத்தில் கை மற்றும் கால்களில் உள்ள கருமை நீங்க என்ன செய்யலாம் என்பதை பற்றி நாம்தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக இப்போதேல்லாம் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி தங்களுடைய அழகினை மேம்படுத்த பலவகையான அழகு குறிப்புகளை பின் பற்றி வருகின்றனர். அதிலும் சரும அழகை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். இருப்பினும் கை கால்களில் உள்ள கருமைகளை கவனிக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். இதன் விளைவாக அந்த பகுதி பார்ப்பதற்கு மிகவும் கருமையாக மற்றும் அசிங்கமாக காணப்படும். எனவே இந்த கை கால் கருமை நீங்க சில வகையான அழகு குறிப்பு டிப்ஸினை பற்றி இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

கை கால் கருமை நீங்க – Home Remedies for Whitening Hands and Feet in Tamil..!

காலில் உள்ள கருமை நீங்க:-

டிப்ஸ்: 1 பொதுவாக நம்மில் பலருக்கு கால் மூட்டுகளில் கருமையாக இருக்கும். இந்த கருமை நீங்க இந்த டிப்ஸை தொடர்ந்து பாலோ செய்யுங்கள்.

அதாவது ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை கை கால் முட்டிகளில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். பின் 15 நிமிடங்கள் காத்திருந்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வர ஒரே வாரத்தில் கை கால்களில் உள்ள கருமை நீங்க ஆரம்பிக்கும்.

கை கால்களில் உள்ள கருமை நீங்க | Kai karuppu niram mara:-

டிப்ஸ்: 2 ஒரு சிறிய பவுலில் சிறிதளவு காய்ச்சாத பாலினை எடுத்து கொள்ளுங்கள். பின் அரை எலுமிச்சை பழத்தினை இந்த பாலில் தொட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு கை மற்றும் கால் முட்டிகளில் நன்றாக அப்ளை செய்து மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சில நாட்களிலேயே கை, கால்களில் உள்ள கருமைகள் நீங்க ஆரம்பிக்கும்.

கை கால் வெள்ளையாக:-

டிப்ஸ்: 3 கை கால் வெள்ளையாக இந்த டிப்ஸை பாலோ செய்யுங்கள், அதாவது ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து கை மற்றும் கால்களில் உள்ள கருமை பகுதியில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

பிறகு 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர கை கால் கருமை நீங்கி, வெள்ளையாக மாறுவதை தாங்களே உணருவீர்கள்.

கை கருமை நிறம் மாற:-

கணுக்கால் கருமை நீங்க டிப்ஸ்: 4 ஒரு பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 3 அல்லது 4 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலவையை கருமையாக உள்ள இடங்களில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செய்து கை கருமை நிறம் மாற ஆரம்பிக்கும்.

இதையும் படியுங்கள்–> கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக்கும் ஓர் எளிய டிப்ஸ்..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement