5 நாட்களில் முகத்தை வெள்ளையாக்குவதற்கு இந்த பவுடரை ட்ரை பண்ணுங்க போதும்..!

Advertisement

Beetroot For Skin Whitening in Tamil

பொதுவாக அனைவரும் வீட்டில் இருக்கும் போதும் சரி அல்லது வெளியில் செல்லும்போதும் சரி முகத்திற்கு பவுடர் அடிப்பது வழக்கமான ஒன்று. அதில் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு பிடித்த பவுடரை முகத்திற்கு அடிப்பார்கள். இந்த பவுடர் அடிப்பதற்கான அதிகபட்ச காரணம் முகம் வெள்ளையாக மற்றும் அழகாக இருக்க வேண்டும் என்பது தான். ஆகையால் இன்றைய அழகு குறிப்பு பதிவில் முகம் 5 நாட்களில் நிரந்தரமாக வெள்ளையாகுவதற்கு பவுடர் தயார் செய்து அப்ளை செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாங்க இந்த பதிவை படித்து பயன்பெறலாமல்..!

இதையும் படியுங்கள்⇒ முடி நீளமா அடர்த்தியா வளர தேங்காய் எண்ணெய்யுடன் இந்த ஒரு எண்ணெய் சேர்த்து தலையில் தடவி போதும்!

இயற்கையாக முகம் வெள்ளையாக பவுடர் தயாரித்தல்:

முகம் வெள்ளையாக மாற என்ன செய்வது

பவுடர் தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  1. பீட்ரூட்- 2
  2. அரிசிமாவு- 2 கப் 

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் எடுத்துவைத்துள்ள 2 பீட்ரூட்டினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மிக்சி ஜாரில் போட்டு ஜூஸ் போல அரைத்து வடிகட்டி தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி வைத்துள்ள பீட்ரூட் ஜூஸினை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். ஜூஸ் கொதித்து கெட்டியாக வரும் வரை கிண்டி கொண்டே இருங்கள். பீட்ரூட் ஜூஸ் கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் ஜூஸினை ஆற விடுங்கள். 

ஸ்டேப்- 3

அடுத்ததாக ஜூஸ் மிதமான சூட்டில் இருக்கும் போது எடுத்துவைத்துள்ள அரிசி மாவினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

5 நிமிடம் கழித்து கலந்து வைத்துள்ள பீட்ரூட் அரிசிமாவினை நன்றாக சலித்து கொள்ளுங்கள். அதன் பிறகு சலித்த மாவினை மீண்டும் மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து 1 மணி நேரம் வெயிலில் காய விடுங்கள். இப்போது பீட்ரூட் பவுடர் தயாராகிவிட்டது.

அப்ளை செய்யும் முறை- 1:

முகம் வெள்ளையாக என்ன செய்வது

தேவையான பொருட்கள்:

  • பீட்ரூட் பவுடர்- 2 ஸ்பூன் 
  • கஸ்தூரி மஞ்சள்- 1 ஸ்பூன்
  • கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன் 
  • காய்ச்சாத பால்- 1/4 டம்ளர்
  • தயிர்- 1 ஸ்பூன் 

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் மேலே எடுத்துவைத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள்.  இப்போது Face பேக் தயாராகிவிட்டது.

பிறகு தயார் செய்த Face பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் வைத்து அதன் பிறகு முகத்தை கழுவி விடுங்கள். இது மாதிரி நீங்கள் செய்தால் 5 நாட்களில் உங்களுடைய முகம் வெள்ளையாக மாறுவதை நீங்களே உணர்வீர்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 அப்ளை செய்யும் முறை- 2:

இயற்கையாக முகம் வெள்ளையாக

அதேபோல நீங்கள் தயார் செய்த பீட்ரூட் பவுடரை 2 ஸ்பூன் கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து குளிப்பதற்கு முன்பு நீங்கள் தேய்த்து குளித்தால் உங்கள் கை, கால்களில் இருக்கும் கருப்பு நிறம் நீங்கி வெள்ளையாக பளபளக்கும்.

இதையும் படியுங்கள்⇒ பாசி பயிரில் முடி அடர்த்தியாக வளருமா இவ்ளோ நாளா தெரியாம போச்சே..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement